44 அவையும் சீர் திருத்தத்தை வலியுறுத்துவதில்லை. நாடகப் பேராசிரியர். சம்பந்த முதலியாரின் நாடகங்களில் சில சீர்திருத்த நாடகங்களாக அமைந்திருப்பினும், அவற் றிற்கு முக்கியத்துவம் ஏற்படவில்லை. அந்நிலையில், நாட் டைச் சீர்திருத்துவதற்கு நாடகமே சிறந்த கருவி என்ப தைக கண்டு, அத்துறையில் ஈடுபட்டு, நாடகங்கள் எழுதித் தாமே நடிக்கவும் முன்வந்த அறிஞர். அண்ணா துரை அவர்களால்தான், சமூகச் சீர்திருத்த நாடகங்கள் செல்வாக்குப் பெற்றன. இன்றோ, அவையே நடை பெறும் நாடங்களில் பெரும்பாலனவாகத் திகழ்கின் றன. அந்நாடகங்களே திரைக் கதைகளிலும் மறுமலர்ச்சி விளைவித்தன எனபது உண்மையாகும். அதற்கும் எதிர்ப்பு முளைத்தது. எனினும் விரைவில் அழிந்தது. ஆனால் இன்றுள்ள அரசாங்கமே - இந்த மறுமலர்ச்சியைத் கடுக்கும் விதத்தில் தன்னாலியன்ற திருப்பணியைச் செய்ய முனைந்துள்ளது ஆம், இந்த எதிர்ப்புக்கள் ஏற்படத்தான் காரணம் என்ன? அவை, பெரும்பாலும் பார்ப்பன வட்டாரத்தி லிருந்தே கிளம்புவது ஏன்? இந்த நாட்டில் நிலைத்துள்ள வைதீகக் கொள்கைகளும், பார்ப்பனர்களின் தனிச் செல் வாக்கும் அழிந்து விடுமோ என்ற அச்சமும் ஐயமுமே அதற்குக் காரணமாம். பொ துநிலையங்களில் தனி இடம், தனித் தண்ணீர்ப் பானை, மாணவர் விடுதிகளில் தனி இடத்தில் உணவு, கோவில்களில் அர்ச்சகர் ஆகும் உரிமை, முதல் இடம், இலவச தர்மச் சோற்றுக்குத் தனி உரிமை, சமஸ்கிருதத் திற்குத் தனிப்பாடசாலை, என்பனபோன்ற நூற்றுக்கணக் கான சலுகைகளைப் பெற்றிருப்பதும், அவையே, வாழ்க் கைத் துறைகள் யாவற்றிலும், தாம் உயர்வு பெறுவதற்கு அமைந்த ஏகபோகப் படிக்கட்டுக்களாக இருப்பதுமே அவற்றிற்கு ஆட்டம் கொடுக்கக் கூடிய எத்தகைய முன்னேற்றக் கருத்தையும், பார்ப்பனர்கள் எதிர்க்கக் காரணமாம். சூழ்நிலையை மாற்றக் கூடிய எதையும் அவர்கள் ஒரு நாளும் எதிர்க்காமல் இருந்ததில்லை, இருக்க
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/45
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை