46 சில லாயின. பொதுவாகப் புராணக் கருத்துக்களுக்கு இருந்த பொருளற்ற செல்வாக்குப் புகைந்துபோயிற்று. அந்தப் புராணங்களிலே பற்றுடையராய் அவற்றை அழி யாமல் காக்க விரும்புவோருங்கூட, அவை கலைக்காகவா வது இருக்கட்டும், அவற்றுள கிடைக்கும் வரலாற்று உண்மைகளுக்காகவாவது இருக்கட்டும், என்று புராணக் கருத்துக்களைக் கைவிட்டு, மற்ற வற்றையே வலியுறுத்தும் நிலை ஏற்பட்டது. மறுபடியும் இக்காலத்திலே தான், ஆளவந்திருக்கும் அடியார்கள், புராணங்களுக்குப் புதுமெருகு தீட்ட முயல்வதைக் காண் கிறோம்! மெருகு நிலைத்தா நிற்கும்? தெ.இ.ந. பலதுறைகளிலும் மறுமலர்ச்சி விளைந்தது போன்றே கட்சிப்பெயரிலும் மாற்றம் ஏற்பட்டது. 1944- ஆம் ஆண் டில், சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மாநில மாநாட்டில்தான், தெ. இ. ந. உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சி, அறிஞர் அண்ணாவின் தீர்மானப்படி 'திராவிடக் கழகம்' எனப் பெயர் மாற்றம் பெற்றது. நீதிக்கட்சி தனது பண்பை இழக்காமலே, மக்கள் உரிமை யைத் தாங்கி நிற்கும் திராவிடக் கழகமாயிற்று. பட்டம் பதவிப் பிரியர்களையும், கவர்னர் கைலாகுக் குக் காத்துக்கிடந்த கனங்களையும், தேர்தல் துந்துபி களையும், சரிகைத் தலைப்பாகைகளையும் 'சேலம்' வெளி யேற்றியது. பொதுமக்களின் உழைப்பால் உருவான மாளிகையில் பொதுமக்களே குடியேறத் தொடங்கினர் சேலத்தில். மாளிகை வாசிகளும், மதோன்மத்தரும், மடாதிபதி களும், மதிற்சுவர் பூனைகளும், அரசியல் எத்தர்களும், ஆரியத்தரகர்களும் அஞ்சுமளவுக்கு அஞ்சா நெஞ்சர் களைத் தொண்டர்களாகக் கொண்ட திராவிடக் கழகம் வளரலாயிற்று. மாநாடு வீரர் கூட்டம், மக்கள் இழிவைத் இழிவைத் துடைப்பதற்கு அடையாளமாகக் கருப்புச்சட்டை அணிந்தது. களும் கூட்டங்களும் மக்கள் ஆதரவைப் பெற்றன. கருஞ் சட்டை வீரர்களின் அணிவகுப்பைக் கண்டு மருண்டனர்
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/47
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை