51 1949- செப்டம்பர் 17-ஆம் நாள், காரிருள் மூடிக் கொண்ட திராவிடத்தில் முழுநிலவு என்று மகிழும்படி, திராவிட முன்னேற்றக்கழகம் தோன்றி அறிவொளி பரப்ப லாயிற்று. அறிஞரின் தலைமையில், நாவலர்களும், கலைஞர்களும், தளபதிகளும், தொண்டர்களும், தாய்மார் களும், மாணவர்களும் பணியாற்ற நாடு நகரங்களிலும், பட்டி தொட்டிகளிலும் கிளைகொண்டு, தழைத்துள்ளது தி.மு.கழகம். மக்கள் மனத்தில் அருகுபோல் கொள்கை வேர் விட்டு, மக்கள் மன்றத்தில் ஆல்போல் அமைப்புக்கள் தழைத்து, தொண்டென்னும் நிழல் செய்து நிற்கிறது தி.மு.கழகம். கடந்த நான்காண்டுகளாகத் தி. மு. கழகம் பலதுறை களில் பணியாற்றியுள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை, நாடகம் நடத்தும் உரிமை, கூட்டம் கூட்டும் உரிமை, மொழி உரிமை, வகுப்புரிமை முதலிய பல அடிப்படை உரிமைகளுக்காகத் தி.மு.கழகம் போராடி வந்திருக்கிறது. 144- தடைகளை மீறிக் கூட்டம் நடத்தி, சிறைத்தண்டனை பெற்றவர் பலர். ஏடு எழுதியது காரணமாகப் பொதுச் செயலாளர் அணணா அவர்களையே சிறைக்கனுப்பி வைத்து, தி.மு. கழகம் தனது கொள்கை உறுதியை நிலை நாட்டிக்கொண்டது. அத்தகு உரிமைகளுக்காகவே. தோழர்கள் என். வி. நடராசன், ஏ. வி. பி. ஆசைத்தம்பி காஞ்சி. கல்யாணசுந்தரம் ஆகியோரும் சிறைத் தண்டனை பெற்றனர். மற்றும்,உரிமைக் குரல் வளர வளர, அடக்குமுறை களும் வளர்ந்தன. தடியடி, கண்ணீர்ப்புகை, துப்பாக்கிப் பிரயோகம் முதலிய கொடுமைகள் நிறைந்தன. தேசீய வாதிகள், பலாத்காரத்தில் ஈடுபட்டனர். தேனீயில், தேளெனெக் கொட்டினர். பலவிடங்களில் மறைந்து தாக்கி னர். தாக்குண்டவர், கைகால் ஒடிந்தவர் பலராயினர். தேசீய வெறிப்பாயச்சலுக்கு ஆளாகித் திராவிட வீரர் களில் சிலர் உயிரும் இழந்தனர். நெல்லிக் குப்பம், அப்துல் மஜீது, வண்ணையம்பதி பாண்டியன் ஆகியோர் முன்னேற் றக் கழகத்தின் முன்னணியில் நின்றதற்காகத்தான் படு
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/52
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை