பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தலைவர்கள் சிறையினில், என்றாலும் வெளியிலே உணர்ச்சி மங்கவில்லை என்பதை, பண்டித நேருவுக்கு நேராக உயர்த்தப்பட்ட கருப்புக் கொடிகள் உணர்த்தத் தவறவில்லை. கருப்புக் கொடி சிறியது. ஆனால் அதை ஏந்தியுள்ள வர்களின் கூட்டம் பெரியது. அதைவிட மிகப்பெரியது அவர்களைப் பிரதிநிதிகளாக அனுப்பி வைத்துள்ள இந்த நாட்டுக்குரிய திராவிட இனம். இந்த உண்மையை உணர வேண்டும் கருப்புக்கொடி காண்பவர்கள். தி.மு.க. இப்பொழுது ஒரு கட்சியல்ல; இயக்கம். மக்கள் சக்தி என்று கூறவேண்டிய நிலை பெற்றுவிட்டது. மக்களையும் - தி. மு. கழகத்தையும் பிரித்துப் பார்ப்பது பேதமையேயாகும். அத்தகைய வலிவு பெற்றுவிட்டதைக் கண்டு, ஆத் திரப்பட்டு, பின்புறமாக வந்து தாக்குதலும், வகுப்புக் கலவரத்தைத் தூண்டுதலும், அதனால் தோன்றக்கூடிய பலாத்காரத்தைக் காரணமாகக் காட்டிக் கழகத்தையே ஒழித்துவிட எண்ணுவதும், வஞ்சக நரித்தந்திரத்திற்கு எடுத்துக் காட்டாகலாமே தவிர, நினைக்கின்ற பலனைத் தாராது. உரிமை இயக்கம் அழியாது! அழிக்க எவராலும் முடியாது.! அழிக்க நினைப்பவர் அழியாமல் இருப்பதும் இயலாது! உண்மையில், ஜூலை 15, திராவிடத்தின் விடு தலை நாள் ! திராவிடரின் தியாக நாள்! மொழி ஆட்சிக்கு, கலைமீட்சிக்கு, பண்பாடு பாதுகாப்புக்கு நாகரிக நல்வாழ் வுக்கு வழிகாட்டிய நாள் ! இன உரிமைக்கும், வகுப்பு நீதிக்கும், துணையான நாள் / திராவிட மக்களின் எதிர் காலத்தை ஒளி செய்யும் ஒப்பற்ற நாள் ! அந்த நாளைக் குறித்த, தி. மு. க.வின் தொண்டால் தன்னுணர்வு பூத்து, இன எழுச்சி காய்த்துள்ளது. திராவிடநாடு கனியும் என்பதில் ஐயமில்லை. அக்கனி, சமத்துவ நிறங்கொண்டு, சகோதரத்துவ மணம் வீசி, சமதர்மச் சுவை நல்கும் என்பதும் உறுதி. அன்று அண் ணல் தியாகராயரின் நல்லெண்ணத்தில் அரும்பிய குறிக்