பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் கிளர்ச்சி, நமது தாயகம் சார்ந்துள்ள இந்தியத்துணைக் கண்டம் அந்நிய ஆதிக்கத் தளையுண்டு அடிமைப் பட்டுச் செயலற்றுக் கிடப்பதைக் கண்டறிந்து கவலைகொண்ட தலைவர் பலர் உரிமை வித்து ஊன்றலாயினர் சென்ற நூற்றாண்டின் இறுதியில். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து அலை கடலைக் கடந்து வந்து கரையேறிய வெள்ளையர், சோப்பும் சீப்பும் கண்ணாடியும் காகிதமும் விற்பனை செய்து வயிறு பிழைக்கவந்த வெள்ளையர், பிறந்த நாட்டில் பிழைப்புக்கு இடமின்மையால் வேற்று நாடு தேடி நுழைந்து வாழ்வு தேடிய வெள்ளையர், கரையேறவயிறு பிழைக்க வாழ்வு தேட இடமளித்த அந்நாட்டையே தமது வேட்டைக் காடா கக் கருதலாயினர். அவர்களின் நுழைவுக்குத் தடைவிதிக் காத நாடோ, தனது உரிமை வாழ்வை இழந்த ஏமாளி நாடாகவும், அவர்களின் சுரண்டல் கொள்ளைக்கு இடந் தரும் சுரணையற்ற நாடாகவும் மட்டுமன்றி அவர்கள் ஆட் சிக்கு அடங்கியும் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டும் நடக் கும் முழு அடிமை நாடாகவும் ஆகிவிட்டது. இயற்கை நலமும் வளமும் கொழிக்கும் இந்த இந்தியத் துணைக் கண்டத்தை, புராண காலமுதல் புண்ணிய பூமி, பாரத நாடு, ஆரியா வர்த்தம் என்றெல்லாம் பெருமை பேசப்படும் இம் மண்டலத்தைத்தான் அந்நியர்கள் அடி மைப்படுத்தி, அல்லற்படுத்தி, அடக்கு முறைகளை வீசி, சிறைச் சாலைகளை நிரப்பிச் சித்திரவதை செய்து, சிங்காரச் சிம்மாசனத்தில் தாமேறி அமர்ந்துகொண்டு சுரண்டல் ஆட்சியை நிலைநிறுத்துவாராயினர். நாட்டு மக்களோ, நாளும் ம் நலியலாயினர், மெல்ல மெல்ல மடியலாயினர்; வாழ்வு வாதையாயிற்று; வேதனை வெள்ளமாயிற்று. மக்கள் மனம் வெள்ளத்தில் சிக்கிய சிற்றுயிராயிற்று.