பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 களின் உண்ணா நோன்பு, சிறை நுழைவு முதலிய தியாகத் தாலும் அகிம்சை நெறியின் உயர்வாலும், காங்கிரஸ் இயக்கத்தில் மக்கள் அளவற்ற நம்பிக்கை கொள்ள லாயினர். மக்களே காங்கிரஸ், என்று கூறும் நிலை பிறந்தது. இந்தியத் தலைவர்களின் மதிப்பு உலகத்தின் கண்களில் உயரலாயிற்று. உலகிலேயே, உத்தமர் காந்தியார் உயர் புகழுக்கு உரியவரானார். பெரும்போர் - இந்நிலையில் இரண்டாவது உலகப் மூண்டது. இந்தியா- தனது உரிமைக் குரலை குரலை உயர்த் தியது. வங்க வீரர் சுபாஷ் சந்திர போஸ், பண்டித நேரு போன்ற எழுச்சியுள்ள தலைவர்களின் தீவிரச் செயல்கள் உணர்ச்சி பொங்கச் செய்தன. அதன் விளைவாக ஆகஸ்டு கிளர்ச்சி விளைந்தது. கிளர்ச்சியின் வடிவமும் தரமும் பலவாகும். எனினும், இந்தியாவின் விடுதலையை இனி யும் தாழ்த்தாது, உரிமையை உடனடியாக வழங்குவது அவசியம் என்ற ஒருமித்த கருத்தை உலகில் நிலை நிறுத் திற்று நியாயமும், நீதியும் மட்டுமே யன்றி, அதற்கு அவசியமும் ஆதரவும் பிறந்தன. இந்தியாவின் மனக் கொதிப்பை, எதிர்ப்பு வெப்பத்தைக்குளிர் நாட்டினராகிய ஆங்கிலேயர் தாங்கமாட்டா தாராயினர். ஆட்சிப்பீடம் அசையத் தொடங்கியது. ஆங்கிலேயரின் புகழ்மிக்க ஆட்சித் தந்திரம் (இராச தந்திரம்) ஆடும் நாற்காலியில் அமர்ந்திருந்து கவிழ்வதை விட, ஆடாத முக்காலியில் உட்கார்ந்து கொள்வது மேல் என்று தீர்மானித்தது. அவர்களது தந்திரம், ஆட்சிப் பீடத்தை விட்டுக் கொடுத் தேனும் வாணிப இலாபத்தைக் காத்துக்கொள்ளத் தூண்டியது. காலத்திற்கேற்ற கோலம் கொண்டனர். விடு தலையைத் தேடியவர்கள் பெற்ற அளவு புகழை, விடு தலையை அளிப்பதாலேயே தாமும் பெற்றுக் - கொள்ளத் தீர்மானித்தனர். விடு தலைக் கிளர்ச்சியோ, பலப்பல ஆண்டுகளாகப், பல்வேறு தலைவர்களைக் கொண்டு, பலவித கட்டங்களைத் தாண்டி, பல்லாயிரவரைப் பலி பீடத்திலே சாய்த்து இறுதி யில் வெள்ளையரை வெளியேற்றக் காரணமாயிற்று. இத்