பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VIII

நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். காரணம், எனது படைப்புகள், பல பாடநூல்களாக வைக்கப்பட்டாலும், இந்த ‘வளர்ப்புமகள்’ தான் முதலாவது பாடநூல். பேராசிரியர் சாலய் இளந்திரையன் அவர்கள் நக்கீரக் குணம் கொண்டவர். இந்த நாவலில் அவர் எதிர்பார்க்கும் தரமும், உரமும், நோக்கும், போக்கும் இல்லாதிருந்தால், நிச்சயம் இந்தப் படைப்பைப் பாடநூலாக்க முன்மொழிந்திருக்கமாட்டார் என்பதை நினைத்ததும் என் மகிழ்ச்சி இரட்டிப்பாக்கியது.

படைப்பும் - படைப்பாளியும்

ஒரு படைப்பாளி தன்னையும் சேர்த்துத்தான் படைப்பை உருவாக்குகிறான். நானும் முப்பது குடித்தனங்களுக்கு ஒண்ணே ‘ஒண்னு கண்ணே கண்ணாக’ இருந்த கதவில்லாத கழிப்பறைக்குள் ‘ஆளிருக்கா’ என்று கேட்டுக்கொண்டே போவதும், குழாயடியில் என் சாண் உடம்பை ஒரு சாணாய் குறுக்கியபடியே குளித்ததும், வீட்டுக்குள் மூட்டைப் பூச்சி, வெளியே கொசுக்கடி என்று இரவில் துரங்கமுடியாமல் அல்லாடியதையும், இப்போது கூட நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்த இன்ப துன்ப அனுபவம், நான் வட சென்னை கல்லூரியில் படித்த 1958-62 ஆண்டு காலக்கட்டத்தில் எனக்கு ஏற்பட்டது. ஆனாலும், இந்தக் கதையில் வரும் ராக்கம்மா, இட்லி ஆயா, துரைமுக கந்தசாமி, ரிக்ஷாக்கார நாயக்கர் போன்ற பழைய மூத்தத் தோழர்களின் அன்பில் கசிந்து போனது, இன்னும் கண்களைக் கசியச் செய்கிறது. என் சித்தப்பா பாண்டி நாடாரும், என் சித்தி ராசம்மாவும் என்னைப் படிக்க வைப்பதற்கு நகைகளை அடகு வைத்ததும், கோணி சுமந்து படிக்க வைத்ததும், நெஞ்சில் நீங்காத நினைவுகளாகச் சுழல்கின்றன. கூடவே, அனைத்து குடித்தன குடியிருப்புகளிலும், வீட்டுக்காரிகள் அசல் அகங்காரிகளாக நடந்த அனுபவங்களை பார்த்ததுண்டு. அதேசமயம், அவர்களுக்கும் என்மீது அளப்பரிய அன்பு. மரியாதை.

இட்லி ஆயா

இந்த நாவலில் வரும் இட்லி ஆயா இப்போது இல்லை. ஒரு சிறுகடை வைத்திருந்த அந்த மூதாட்டியிடம், நான் சென்று, அவளை தனது பழையக் காதல் சங்கதிகளைப் பேச வைத்தது இப்போதுதான் நடந்ததுபோல் தோன்றுகிறது. அவளும் கையில் காசில்லாமல், மூக்குறிய எனக்கு சிகரெட்டையும், வாயூறிய எனக்கு நிலக்கடலை மிட்டாயும் கொடுத்ததும் நினைவுக்கு வருகின்றன. ஆக, காதல் படம் காட்டியவளே எனக்குக் காசு வாங்காமல், இவற்றை அடிக்கடி தருவாள். கையில் காசு இல்லாத எனக்கோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/10&oldid=1133652" இலிருந்து மீள்விக்கப்பட்டது