பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IX

அவளது அடுத்த காதல் காட்சிகளை கிளறிவிட்டு, தம் அடிக்க வேண்டுமென்று ஆசை எழும். இந்த நாவலில் வரும் மல்லிகாவிற்கு கிடைத்த அன்பு போல், எனக்கும் இவளின் அன்பு கிடைத்தது. எனது சித்தப்பாவும் சித்தியும் என்னை அடிக்கடி கடிந்து கொண்டாலும், அதில் அன்பு மயமே வேரானது. இன்னும் சொல்லப்போனால், இவர்களுக்கு நானும் ஒரு வகையில், ‘வளர்ப்பு மகனான’ ஆண் மல்லிகா.

சொக்கலிங்கத்தில் சொக்கிப்போய்...

என்றாலும், லியோ டால்ஸ்டாய் தன் மனைவியை மட்டம் தட்டுவதற்காக ‘அன்னா கரீனா’ என்ற நாவலை எழுதத் துவங்கி, பின்னர் அந்த நாவல் நாயகியை நல்லவளாக்கி அந்தப் பாத்திரத்தோடு ஒன்றிப் போனார். இதேபோல், ஒரு சங்க மலரில் என்னைத் தாக்கி எழுதிய என் உறவினர் சொக்கலிங்கத்திற்கு சூடுகொடுக்க நினைத்து, இந்த நாவலை எழுத முனைந்தபோது, பாத்திரப் படைப்பிலும் தகவல் அடிப்படையிலும் இந்தச் சொக்கலிங்கம் சுகலிங்கமாகி விட்டார். நாவலில் வரும் திருமண நிகழ்ச்சி, அந்தக் காலத்தில் வட சென்னையில் உண்மையிலேயே நடந்த ஒன்று. உறவுமுறைச் சங்க பேர்வழிகள் நாவலில் வரும் அடை மொழிகளோடுதான் அப்போது அழைக்கப்பட்டார்கள்.

இந்திரமய சந்திரா

‘வளர்ப்புமகளில்’ வரும் மல்லிகாவும் இந்திரமயத்தில் வரும் சந்திராவும், கால வேறுபாட்டால் மாறுபட்டவர்கள். என்றாலும் இவர்கள் வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தள்ளப் பட்டவர்கள். இந்திரமயக் கதாநாயகி, இன்றையப் பெண்களின் பிரச்சினைகளை உருவகப்படுத்துகிறவள். நமது பெண்ணியவாதிகளும், இதில் தீவிரவாதிகளாகக் கருதப்படும் ஆண் படைப்பாளிகளும் சொத்துரிமையை வற்புறுத்தாத வரதட்சணை, கணவன் கொடுமை, சமையலறைச் சமாச்சாரங்கள், படுக்கையறைத் துன்புறுத்தல்கள் போன்றவற்றை அகலப்படுத்தி, சிற்சில சமயங்களில் ஆபாசமாகவும் எழுதி இருக்கிறார்களே தவிர, இன்றையப் பெண் எதிர்நோக்கும் ஆபத்தான பிரச்சனையை அணுகவே இல்லை. அநேகமாக என்னைத் தவிர

இன்றைய கிராமங்களிலும் நகரங்களிலும், ஆண்கள் வெளியே போய் ‘வரைவு மகளிரோடு’ கூடிக்கலந்து வாங்காத நோய்களையெல்லாம் வாங்கி விடுகிறார்கள். இதை அறியாமலே மனைவியாகிப் போன பெண் அந்த நோயை கணவனிடமிருந்து வாங்கிக் கொள்கிறாள். அவனது இத்தியாதிகளை தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/11&oldid=1133653" இலிருந்து மீள்விக்கப்பட்டது