பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

இந்திர மயம்

போலீஸ்காரிகள் அவளை பிடித்திழுத்துக்கொண்டு போனார்கள். அந்த சமயத்திலும் இவளுடைய நாத்தி அனிதா, இவள் தன்னை கடக்கும்போது ஆணிபதித்த காலணியால் அவளுடைய குதிகாலை மிதித்தாள். வெளியே தெரியாமல் இருப்பதற்காக, குடும்ப பெண்ணாய் புடவையை பாதம் வரை இழுத்துப் பரப்பிக் கொண்டாள்.

தேக்கு மரத்தால் கடைந்தெடுத்த கூண்டு.. நீதிபதிக்கு அருகேயுள்ள நீளவாக்கிலான கூண்டு. மரப்பலகை ஏணிப்படிகளையும், நான்கடி உயரத்திலான மேல்தளத்தையும் உள்ளடக்கிய அந்தக் கூண்டு வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே நீதிமன்றமாக செயல்படுகிறது. தப்பித்த கொல்லயாளிகளையும் தப்பிக்கமுடியாத அப்பாவிகளையும் சட்டத்தைச் செப்படியாக்கிய அரசு தரப்புக்களையும் - எல்லாவற்றிக்கும் மேலாக விடுதலை போராட்ட வீரர்களையும் கிரிமினல்களாய் தாங்கிய கூண்டு இதில் ஏறுகின்றவர்களுக்கும் இவர்களை குறுக்கு விசாரணை செய்பவர்களுக்கும் வாதி. பிரதிவாதிகளுக்கும் இந்த கூண்டின் பழைமையோ அல்லது அதன் அருமையோ தெரிந்திருக்க நியாமில்லை. நினைத்துபபார்க்கக்கூட நேரமில்லாதவர்கள. தாமத்தை புறந்தள்ளி எதிராளிகளை எப்படி மடக்குவது என்பதிலேயே குறியாக இருப்பவர்கள். இந்தக் கூண்டு தொல்பொருள் காட்சியகத்தில் இருக்க வேண்டும் என்பதை உணராதவர்கள்.

சந்திரா, கடந்த நான்காண்டுகளில், இப்பொழுதுதான் இந்தக் கூண்டில் ஏறுகிறாள். இதுவரை முன்னால் நின்ற பழைய கூண்டில் ஒரு நிமிடம் நின்று. வாய்தா கிடைத்ததும் பெண் போலீஸால் வாரிக்கொண்டு போகப்பட்டவள். நீதிபதியையும், இப்போதுதான் முழுமையாகப் பார்க்கிறாள். இவர், இந்த வழக்கிற்கு வந்த நான்காவது நீதிபதி என்பது இவளுக்குத் தெரியாது. கடந்த நான்காண்டுகளில் தவணை முறையிலான தொடர்கதையை எழுதுவதுபோல் மூவர் இந்த இருக்கையை அலங்கரித்துவிட்டு போய்விட்டார்கள் என்பதும், இவளுக்குத் தெரியாது. எனவே வாய்தா. வாய்தாவாக இவள் அலைக்கழிக்கப்பட்டது. இந்த நீதிபதிக்கு கண்காட்சியாய் தெரியாது என்பதும் தெரியாது. முன்பு மறுமுனைக் கூண்டில் நிற்பவனோடு நிற்கவேண்டும் என்று இவளுக்கு ஆணையிட்டபோது. இவள் அலறியடித்து. அப்படி நிற்கமறுத்ததும், அவன் கூண்டுக்குள் நின்றால் வெளியே நிற்பதும், இவள் உள்ளே நிற்கவேண்டும் என்பதற்காக அந்த மார்த்தாண்டன் வெளியே நிற்பதும் கடைசியில் நீதிமன்ற காவலர்கள். இவர்கள் இருவரையும் உருட்டி மிரட்டி கூண்டுக்குள் ஜோடி சேர்த்ததும் இந்த நீதிபதிக்கு தெரியாது. ஆரம்ப காலத்தில் என்னை சீக்கிரமாக தூக்கில் போடுங்க நான் "இருக்கப்படாது, இருக்கப்படாது" என்று இவள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதும். இந்த புதியவருக்கு தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/138&oldid=1134340" இலிருந்து மீள்விக்கப்பட்டது