பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 7

நாலு மாத காலம் கடந்தது. பார்வதி பழைய பார்வதியாக இல்லாதது மல்லிகாவிற்கு தெளிவாகத் தெரிந்துபோய் விட்டது. அடிக்கடி அரவை மில்லில் வேலைபார்க்கும் பையன்களைத் திட்டும் சாக்கில் "ஊர்ப்பயல் பிள்ளைகள். ஊர்ப்பயல் பிள்ளைகள்தான்" என்று ஜாடைமாடையாகத் திட்டத் துவங்கினாள்.

இப்போது மல்லிகாவிற்கு தலைவாரி விடுவதில்லை. கண்ணுக்கு மை போடுவதில்லை. அதேசமயம் எதுவுமே நடவாதது மாதிரியும் பல சமயங்களில் மல்லிகாவிடம் நடந்து கொள்கிறாள். ஒருதடவை ஆட்டோ ரிக்ஷாவில் ஏறும்போது மல்லிகா கால் தவறி கீழே விழப்போனபோது பார்வதி பதறிப்போய் "பார்த்துப் போம்மா. நீ வாரது வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக்கிட்டு இருக்க வேண்டியதிருக்கு" என்று சொல்லியிருக்கிறாள். அதனால் அம்மா, பழைய அம்மாவாக மாறிவிட்டாள் என்று மகிழ்ந்துபோன மல்லிகா, மாலையில் துள்ளிக் குதித்து ஓடிவந்து 'அம்மா' என்றபோது, அண்ணனுடன் சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்த அந்த அம்மாக்காரி "அம்மா இன்னும் சாவாமல்தான் இருக்கேன்" என்று சொன்னாள்.

உடனே மல்லிகா. 'நாம சாவாமல் இருக்கோமே' என்று மனதுக்குள்ளே புலம்பிக் கொண்டாள். அண்ணன் ராமசாமியின் வருகை அதிகரிக்க அதிகரிக்க, அம்மாக்காரியின் வெறுப்பின் வேகம் ஏறிக்கொண்டிருப்பது. கல்லூரிக்காரிக்குத் தெரியாது.

ராமனும் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தான்.

"உன் சித்திக்காரியை கெட்டியாகப் பிடித்துக்கடா... அவ்வளவுதான் நான் இப்போ சொல்ல முடியும்" என்று பெரிய மாமா ராமசாமி சொன்னதன் உள்ளர்த்தம் புரியாவிட்டாலும் வெளியர்த்தம் புரிந்தவன்போல். சித்தி வீட்டுக்கு வரத் துவங்கினான்.

"இங்கே எதுக்குடா வந்தே" என்று கேட்கிற சித்தி, "ஏண்டா. அடிக்கடி வரமாட்டேங்கிற" என்று சொன்னதில் அவனுக்கு பட்டைச் சாராயத்தைக் குடிக்கும்போது ஏற்பட்ட 'கிக்'கைவிட் அதிகமான 'கிக்' கிடைத்தது சொக்கலிங்கம்தான் அவன் வருகையை அறவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/46&oldid=1133698" இலிருந்து மீள்விக்கப்பட்டது