பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வளர்ப்பு மகள்

மல்லிகா. சரவணனை, மனதிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டு, கையில் இருந்த புத்தகத்தில். கண்களைப் படர விட்டாள்.

வாசலில் சத்தம் கேட்டு, புத்தகத்தில் இருந்த கண்ணை விலக்கிய மல்லிகா, வாசல்பக்கம் நடுக்கத்துடனும் தயக்கத்துடனும் நின்ற செல்லம்மாவைப் பார்த்துவிட்டு, பின்னர் சமையலறைக்குள் அடுப்போடு சரசமாடிக் கொண்டிருந்த பார்வதியை பின்நோக்கித் திரும்பி. கண்களை வீசிக்கொண்டே, "அம்மா. உன் நாத்தனார் வந்திருக்காங்க.." என்று கூறிவிட்டு. மீண்டும் புத்தகத்தின் முனையில் முன்தலை மோத, குனிந்தாள்.

செல்லம்மாவிற்குப் பற்றி எரிந்தது. ஒட்டிப்போன வயிற்றின் ஒரமாகக் கிடந்த 'அச்சடி' புடவையை இழுத்து வயிற்றை மூடிக் கொண்டாள். வயிறாரப் பெற்ற மகள், மூணாவது மனுஷியைச் சொல்வதுபோல், 'உன் நாத்தனார்' என்றதுமே, அவள் ஒரு கணம் செத்துப் போனாள். மறுகணம் "ஆமாண்டி... நான் நாத்தனார்தான். பெத்த தாயையே நாத்தனாரா ஆக்கின உனக்கு ஒரு பிள்ளை பிறந்தால்தான், உனக்கு என் நிலைமை புரியுண்டி" என்று சொல்லப் போனாள். பிறகு, தான் பெற்ற பிள்ளைக்கு, தன்னைப் போன்ற நிலைமை வரக்கூடாது என்று நினைத்தவள் போலவும், மகளைத் திட்ட நினைத்ததற்கு அபராதம் செலுத்துபவள் போலவும் "மல்லிகா, உங்க அப்பாவை... எங்கம்மா?" என்று கேட்டாள்.

மல்லிகா, அவளை நிமிர்ந்து பார்த்தாள். அந்த நடுத்தர வயதுக்காரியின் உதட்டுத் துடிப்பும், உட்குழி கண்ணும். அவளை என்னவோ செய்தது. ஊஞ்சல் பலகையில் இருந்து இறங்கி, "உள்ளே வாங்க" என்று சொல்லிக்கொண்டே அவள்மீது கருணைப் பார்வையை வீசிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

நான் பெத்த பெண்ணே "நீ உள்ளே வாங்கன்னு சொல்லாமல், வெளியே போங்கம்மான்னு ஒரு தடவையாவது அம்மான்னு சொன்னா நான் சந்தோஷ் ப் பட்டிருப்பேனடி" என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்ட செல்லம்மா உள்ளே வந்தாள். பார்வதி. அவளை வழக்கம்போல் எதிர்கொண்டு அழைக்கவில்லை.

செல்லம்மா. சமையலறைக்குள் ஓடிப்போய் கொதித்துக் கொண்டிருந்த பாலை இறக்கபோன பார்வதியிடம் "நான் இறக்குறேம்மா" என்று சொல்லிவிட்டு மட்டும் நிற்காமல், பாத்திரத்தையும் இறக்கி வைத்தாள். பின்னர், நாத்தனாரிடம் செயலில் பேச நினைத்தவள்போல். பக்கத்தில் இருந்த துடைப்பத்தை எடுத்து சமையலறையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/54&oldid=1133710" இலிருந்து மீள்விக்கப்பட்டது