பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வளர்ப்பு மகள்

அவன் பேசியபோது. பலத்த கைதட்டல் "தாய்மார்களே" என்று விழிக்கும் ஒவ்வொருவனும். பதினெட்டு வயதுப் பெண்ணைப் பார்க்கையில், "இந்த வயதில் என் அம்மாவும் இப்படித்தான் இருந்திருப்பாள்" என்றும், எண்பது வயதுக் கிழவியைப் பார்க்கையில், "என் அம்மாவும் இந்த வயதில் இப்படித்தான் இருப்பாள்" என்று நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் காலந்தான் பெண்ணின் விடிவுகாலம். உரிமையைப் பற்றிப் பேசத் தேவையில்லாத அளவிற்கு ஏற்படும் பொற்காலம் என்று அவன் சாதாரணமாகப் பேசியபோது, கைதட்டிப் பாராட்டினார்கள்.

இந்தத் தடவையும் முதற்பரிசு சரவணனுக்கே. வழக்கமாக இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசு பெறும் மல்லிகாவுக்குப் பதிலாக இன்னொருத்தி வாங்கினாள்.

மல்லிகா, சக தோழிகள் "ஏன் பேசவில்லை" என்று கேட்டால் எப்படிப் பதிலளிப்பது என்று புரியாமல், அந்த தர்ம சங்கடத்தைத் தவிர்ப்பதற்காக, தமிழ் உதவிப் பேராசிரியர். நன்றி சொல்லிக் கொண்டிருந்தபோது, அவள் கல்லூரி வாசலுக்கு வந்துவிட்டாள். ஆட்டோ ரிக்ஷாக்காரரை சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு வரச் சொல்லவேண்டும் என்று முந்திய இரவு நினைத்தவள். தான், ராமனுக்கு ஒருவேளை மனைவியாகலாம் என்ற அவலத்தில் அதை மறந்துவிட்டாள்.

மெள்ள நடந்து கொண்டிருந்தாள்.

"நீங்கள் ஏன்... இன்றைக்குப் பேசல..." என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

சரவணன்

சைக்கிளை மெதுவாக விட்டுக்கொண்டு, பெடலை லேசாக அழுத்திக்கொண்டு, அவளுக்கு இணையாக வந்தான். பிறகு, அவளுக்கு மதிப்புக் கொடுப்பவன்போல், சைக்கிளை விட்டு இறங்கினான்.

"சொல்லுங்க... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?"

மல்லிகா. அவனை நிமிர்ந்து பார்த்தாள். மானசீகமாக அவனருகிலேயே அந்த ராமனையும் நிறுத்திப் பார்த்தாள் வேறுபக்கமாகத் திரும்பி, கண்ணீரை உதிர்த்துக் கொண்டாள். அவளுக்கு சரவணன்மீது எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. அழகில் சாதாரணமானவன்தான். ஆனால், பேச்சாற்றலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைத்து மனம்விட்டுப் பழகும் பாங்கும் அதேசமயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/62&oldid=1133721" இலிருந்து மீள்விக்கப்பட்டது