பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வளர்ப்பு மகள்

வெறும் பிரச்சின்ன தனியானப் பிரச்சினை அல்ல். இதரப் பிரச்சினைகளோட ஒரளவுக்குச் சேர்ந்தது. அரிஜனப் பிரச்சினையைப் போல, அது ஒரு சமூகப் பிரச்சினை. சரி, ஒட்டலில் ஒரு காபி குடித்துக்கொண்டே பேசலாமே?"

மல்லிகா, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். பயந்துபோய் சிறிது விலகிக்கொண்டாள். சரவணன் புரிந்துகொண்டான்.

"நான் நீங்க நினைக்கிற இனத்தைச் சேர்ந்தவன் இல்லை. வரதட்சணைக் கொடுமைன்னு மனைவிகள அடிக்கிறாங்களே, அதைப் பேசலாமுன்னு எண்ணிக் கேட்டேன். உங்களிடம் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு. நாளைக்கு கல்லூரிகளுக்கு இடையே நடக்கிற ஒரு பேச்சுப் போட்டிக்கு நீங்கள் பாயிண்ட்ஸ் கொடுத்தால், பரிசு வாங்கிடுவேன்."

"இங்கேயே நின்று பேசலாமே?"

"வரதட்சணைக் கொடுமையால பல பெண்களுக்குக் கல்யாணம் நடக்கலேன்னு மேடையில பேசறோம். கட்டுரையாய் எழுதறோம். கதையாய்ச் சொல்றோம். ஆனால் இந்தப் பெண்கள், பெரிய பெரிய ஆபீசருக்கு மனைவியாய்ப் போகிற ஆசை நிறைவேறாமல் போவதைத்தான் வரதட்சணைக் கொடுமைன்னு சொல்றாங்க. இவங்க ஏன் ஒரு பியூனைக் கல்யாணம் பண்ணப்படாது? ஏன் ஒரு ரிக்ஷா தொழிலாளியைக் கல்யாணம் பண்ணணுமுன்னு சொல்லவில்லை. பண்ண முடியாதுன்னும் தெரியும். ஏன் தெரியுமா?"

"சொல்லுங்க..."

"இந்த சமூக அமைப்பிலே. பியூனோட வாழ்க்கை முறை வேறே, ஆபிசரோட வாழ்க்கை முறை வேறே. ஏழையோட கலாச்சாரம் வேறே. பணக்காரன் கலாச்சாரம் வேறே. இவை போய். கலாச்சார ஒருமையும் வாழ்க்கை முறையில் ஒருமையும் வந்தால்தான், தொழில் அந்தஸ்து, சமூக அந்தஸ்தோட இணைக்கப்படாத காலம் வந்தால்தான். வரதட்சணைப் பிரச்சினையும் தீரும் இல்லை என்றால், அது அன்பளிப்பு பிரச்சினையா மாறுவேடம் போடும்..."

"நான் வரட்டுமா?"

"போரடிக்கிறேனோ?"

"இல்ல. சில பிரச்சினைகள். சில விஷயங்கள் புரியப் புரிய பயமாய் இருக்கு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/64&oldid=1133724" இலிருந்து மீள்விக்கப்பட்டது