பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வளர்ப்பு மகள்

இருப்பதுபோல் இருந்தது. எட்டாவது வகுப்பில் படித்த அதே குறளை, கல்லூரியில் வேறு கோணத்தில் படிப்பது மாதிரி.


11

திடீரென்று தன்னருகே ஒரு சைக்கிள் நடனமிட்டுக் கொண்டு வருவதைப் பார்த்து அவள் மகிழ்ச்சியோடும் நாணத்தோடும் ஏறிட்டுப் பார்த்தால் -

ராமன் பிரேக் இல்லாத ஒரு சைக்கிளில், சவாரி வந்தான். அவன் அடிக்கடி வீட்டுக்கு வரும்போதெல்லாம், அவளுக்கு மரியாதையாக ஒதுங்கி நிற்பவன். ஏதாவது அவசியத்தால் பேச வேண்டியது ஏற்பட்டால் "பாப்பா... மச்சானுக்கு காபி வேணுமாம்" என்று ஒதுங்கி நின்றே கேட்பவன். ஆனால் இன்று...

மல்லிகா, வேக வேகமாக நடந்தபோது, அவனும் சைக்கிளை வேக வேகமாய் மிதித்துக்கொண்டு "சைக்கிள்லே ஏறிக்கமே. அந்த ரிக்ஷா கஸ்மாலம் எங்க பூட்டான்" என்றான்.

மல்லிகா அவனைக் கோபத்தோடு பார்த்தாள்.

"நான் என்ன எருமை மாடா 'மே'ங்றீக?"

"கோவிச்சுக்காதமே. அக்காள். ஒன்ன கையோட ஏத்திக்கினு வரச்சொல்லிச்சு."

"எனக்கு நடக்கத் தெரியும்."

ஒரு கஸ்மாலம் உன்கிட்ட பேசுனானே, அவன் யாரு?"

"கஸ்மாலம் கண்ணுக்கு எல்லாம் கஸ்மாலமாத்தான் தெரியும். அவரு... என்னோட நண்பர்..."

"அக்காவண்ட சொல்லட்டுமா?"

"சொல்லேன். சரி... வழியை விடுங்க..."

ராமன் எதிர்த்திசையில் சைக்கிளை உருட்டினான். ஒருவேளை. சரவணனை வழிமறித்துத் தாக்கப் போகிறானோ என்று மல்லிகா நினைத்தாள். பின்னாலேயே ஓடலாமா என்றுகூட எண்ணினாள். அவரை 'அடிக்காதே... அடிக்காதே' என்று கத்துவதுபோல் முகத்தைக் கொண்டு போனாள். தலைதெறிக்க சைச்கிளை மிதித்த ராமனையும் தொலைவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/66&oldid=1133727" இலிருந்து மீள்விக்கப்பட்டது