பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

67

"அப்பாவைப் பார்க்கணும்... அம்மாவைப் பார்க்கணும்... யாராவது கூட்டிட்டுப் போங்க... அய்யோ.. எங்க அப்பாவைப் பார்க்கணும்... அம்மாவை..."

பெருமாள், மகளையே பார்த்துக்கொண்டு நின்றார். உள்ளம் கலங்கியதால், கண் கலங்கியது. பிறகு, இந்தக் கலக்கத்திற்குக் காரணமான சொக்கலிங்கத்தின்மீது கொலைத்தனமான கோபம் ஏற்பட்டது. கோபத்தை சிறிது குறைத்துக்கொண்டே பேசினார்.

"உன் இஷ்டம்... உனக்கு இங்க இருக்கது பிடிக்கலன்னா, இப்பவே கொண்டுவிடத் தயாராய் இருக்கேன். என் மானத்தைவிட்டு, உன்னை... அங்கே கொண்டு விட்டுட்டு, அவன்கிட்ட மன்னிப்பு வேணுமுன்னாலும் கேட்கேன். ஏன்னா... இந்த அம்பது வருஷமா மானத்தோட வாழ்ற எனக்கு, அந்த மானத்தைவிட நீதான் முக்கியம். ஆனால் ஒண்ணு. உன்னை, அந்த கேடுகெட்ட ரவுடிப்பயலுக்கு கட்டிக் கொடுக்கத் துணிந்தவங்க, எதுக்கும் துணிந்த பாவிகளாத்தான் இருப்பாங்க... நீ மட்டும் அவங்க சொந்த மகளாய் இருந்தால், இப்படி அந்த சோதாப் பயலுக்குக் காவு கொடுக்கிற எண்ணம் வருமா? இனிமேல், அந்த வீட்ல, நீ ராமன் பயலை கட்டிக்காம இருக்க முடியாது. இனிமேல் நீ அங்கே போனால், அவளுக்கு இளக்காரமாய் போயிடும். உன்னை... எப்படி வேணுமுன்னாலும் செய்யலாம் என்கிற தைரியம் வந்துடும் என்னாலயம் தட்டிக்கேட்க தகுதியில்லாமல் போயிடும்.

பெருமாள், முதன்முதலாக தனது தகுதிக் குறைவை நினைத்து வெட்கப்பட்டவர் போல் சிறிது தலையைத் தாழ்த்திவிட்டு மீண்டும் நிமிர்ந்து பேசினார்.

"இவ்வளவு நீ அழுறே... சொக்கலிங்கத்துக்கோ... அவன் பொண்டாட்டிக்கோ... நிஜமாவே உன்மேல் பாசம் இருந்தால், இங்கே வந்து கூட்டிட்டுப் போகலாமே? என்னை, ரெண்டு அடி அடித்துட்டு கூட கூட்டிட்டுப் போகலாமா... நான் திருப்பியா அடிப்பேன்? உன்னை இங்கே கொண்டு வந்ததுல... நான் சந்தோஷப் படுறேன்னு நினைக்கிறியா... நீ நல்லா இருக்கணும் என்கிறதுதான் எனக்கு முக்கியம்மா... நான்... பாவி... நான் பாவி..."

பெருமாள். தன் தலையிலே அடித்துக்கொண்டார். ஆனால் அழவில்லை.

மல்லிகா, அப்பாவையே பார்த்தாள். அவருக்குள்ளே எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/81&oldid=1133743" இலிருந்து மீள்விக்கப்பட்டது