பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


நடுவதும் பயன்தராது. ஆகவே, சரியான கேரத்தில், நீரியான சமயத்தில் பந்தைத் தொடரக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பந்தினை சரியான நேரத்தில் சரியான ஆத்தில் சந்தித்தவுடன், வலிமையாகக் குறிபார்த்து, விரைவாக இலக்கினுள் அடித்துவிட வேண்டும். இதற்கு கோல் ஆட்சித்திறன், கால்களை விரைவாக இயக்குதல், தேவைக்கேற்றவாறு இயங்கும் மணிக் கட்டின் நெகிழ்ச்சி தான் அதிகம் வேண்டும். குறிபார்த்து இலக்கினுள் அடிக்கும்போது, குழப்பு மான கருத்துக்களை வரவிடக்கூடாது.கம்பிக்கையுடன் அடிக்க வேண்டும். இலக்கைக் காக்கின்ற இலக்குக் காவலனின் இயக்கம், அவனது அசைவு எப்படியிருக் கிறது என்பதனையும் கூர்ந்து கவனித்துக் கொண் * டிருந்தால் இந்த சமயத்தில் நல்ல உதவி செய்யும். எனவே, முன் ட்ைடக்காரர்கள், தகுந்த முன் னுணரும் அறிவுடன், தயக்கமில்லாத விரைவுடன், தவறிப்போகாத குறியுடன், தக்கத் தருணம் பார்த்து இலக்கை நோக்கிப் பந்தை அடித்திட முயற்சிக்க வேண்டும். வளைகோலுடன் பந்து சுற்றி வளையம் வந்துவிடும் அளவுக்குக் கோலாட்சித் தி ற னை வளர்த்துக் கொண்டால், வெற்றி நிச்சயம்தான். அதற்கேற்ற உழைப்பும் ஒத்துழைப்பும், உயர்ந்த முயற்சியும் உரிய பயிற்சியும் நிறைய வேண்டும். முயன்றவர்க்கு முடியாதது இல்லையே!