பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கொட்டும் மழையும், கொடிய வெயிலும், வசபுயலும், வாட்டும் பணியும் அக்கால ஆதிவாசி மக்கள் அவதிக்குள்ளாக்கிய பொழுது, அறிவு முதிர்ச்சிபெரு அவர்கள் மரப்பொந்துகளிலும், மண்டிய புதர்களிலும் வாழ்ந்திருந்த நேரம். வெறி பிடித்திருந்த மிருகங்களி பசி வேகத்திற்கு இரையாகாமல், பயந்து ஓடி, பதுங்மறைந்து, உயிரைக் காத்துக்கொள்ள ஓடே வாழ்ந்த காலம்.

அச்சங்கள் தவறினை இழைக்க அதனால் மிருககளுக்கு இரையானோர் பலர். அந்த அனுபவங்களின அறிவைப் பெற்றவர்களின் பரம்பரையினர், முன்னாள் மூதாதையர்போல் பயந்து ஓடாமல், எதிர்த்து நின்று அவைகளைக் கொன்று, உணவாக்கிக் கொண்டனர்.

தீமூட்டத் தெரிந்ததும், உணவு வகைகளைப் பக்குவப்படுத்தப் பழகிக்கொண்டதும், இயற்கையின் சீற்றத்துக்கு இரையாகாமல் மறைவிடம் தேடிக் கொண்டதும், மானத்தை மறைக்க ஆடை சூடிக் கொண்டதும் எல்லாம் அறிவினைத் தந்ததுடன், அவர்களுக்கு உடலிலும் மனதிலும் ஒருவித சுகத்தையும் தந்தன.

எல்லாம் கிடைத்துவிட்டால் இன்பந்தான்! அதற்காக மனிதமனமும் இனமும் அமைதியாக இருந்து விடுமா? மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து விடுமா?

உணவும் உடையும் உறங்க இடமும் கிடைத்து உல்லாசமாக வாழ்ந்த பொழுது, உடல் வளமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஓடியும் தாண்டியும் அவர்கள் பொழுதைப் போக்கினர்கள். காலம் மாற மாற, தங்களுக்குள்ளே மல்யுத்தம் செய்தல், மிருகங்களை