பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

இதன் எழுச்சியை யுணர்ந்த, அனைத்துக் கிளைக்களிலும் தலையாய இடம் பெற்றிருந்த ‘பிளாக்ஹீத்’ (Plack Heath) சங்கம்தான், முதன் முதலாக வளைகோ பந்தாட்டத்திற்கான ஒரு சில புதிய விதிமுறை உருவாக்கியது.

அதனையடுத்து, 1883ம் ஆண்டு ‘விம்பிள்டன் வளை கோல் பந்தாட்ட சங்கம்’ ஆட்ட விறுவிறுப்பிற்கு வேகத்திற்கும் ஏற்றவாறு, விதிகளை மாற்றி செழுமையாக்கித் தந்தது

1660ம் ஆண்டு, எல்லா சங்கங்களும் இங்கிலாந்து வளைகோல் பந்தாட்டக் கழகத்தின் கிளைக் கழகமாக இணைந்தன.அதன் தலைமைக் கழகத்திற்குத் தலைவராக எட்டாம் எட்வர்டு அரசர் பொறுப்பேற்றர்.

அத்துடன் அமையாது, 1887ம் ஆண்டு பெண்களுக்கான தேசிய விளையாட்டாகவும் வளைகோல் பந்தாட்டம் ஆக்கப் பெற்றது.

இவ்வாறு பெண்களும் ஆடும் பெருமையுடன், புதுமைப் பொலிவுடன், புதிய வலிவுடன், பதமான விதி முறைகளுடன் இதமாக மாறிய வளைகோல் பந்தாட்டம் 1900ம் ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில் ஒரு ஆட்டமாக அறிமுகப்படுத்தப் பெற்றது.

இதற்குப் பிறகு 1908ம் ஆண்டும் 1920ம் ஆண்டும் கடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் எல்லாமே இங்கிலாந்தே வெற்றிவாகை சூடி வீறுபெற்று விளங்கியது.


விளக்கமான வரலாறறு விவரங்களுக்கு ஆசிரியர் எழுதியுள்ள ‘விளையாட்டுக்களின் கதைகள்’ என்ற நூலில் காணவும்.