பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு விளக் கம் வளைகோல் பந்தாட்டத்திற்கென்று ஒரு சில விளை பாட்டு முறைகள் உள்ளன. ஆட்டத் தொடக்கத்தி: லிருந்து இறுதிவரை, அந்த முறைகள் பற்றிய கலைச் சொற்கள் அதிகமாக சொல்லிலும் செயலிலும் இடம் பெறும். அதுபற்றிய விளக்கமும் விவரமும் நன்கு தெரிந்தால், ஆட்டத்தில் அதிகப் பற்றும் பிடிப்பும் ஏற்படும். விரைவில் திறன் நுணுக்கங்களை வளர்த்துக் கொள்வதுடன் புதிய எழுச்சியும் உணர்ச்சியும் பறப்படும். ஆகவே, விளையாட்டில் வரும் கலைச் சொற்கள் பறறிய விளக்கங்களையும், அதற்கான விதி முறைகளை யும் பின்பற்றுகின்ற விவரங்களையும் இனி விரித்துக்கூறுவோம். ஆட்டத் தொடக்கம் (புல்லி (Bally) ఇర-తీణార్తీ தொடக்கி வைப்பதால் இதனை தொடக்கி’ எனலாம். (ஒலியை பெருக்கும் கருவியை ஒலிபெருக்கி என்பதுபோல)