பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

   தற்பொழுது புதிய விதிமுறையை விளையாட்டு வல்லுநர்கள் புகுத்தியுள்ளனர்.
   சமமான வெற்றி எண்கள் பெற்ற இரு குழுவினாகும். 5 'தனி அடிகளை' ஒறுநிலைப் புள்ளியிலிருந்து. அடித்தாடுவதற்குரிய வாய்ப்பினை நடுவர் அளிக்கிறார்.
   அந்த ஐந்து வாய்ப்புக்களிலும், முன்னரே பெற்றிக்கும் வாய்ப்புக்களிலும் சேர்த்து, அதிக வெற்றி எண்களைப் பெறுகின்ற குழுவே வெற்றி பெறுகிறது என்று, இவர் இறுதியில் அறிவிக்கிறார்.
   நாணயம் சுண்டுவதில் வெற்றி பெறுகின்ற குழுவினர் தேர்ந்தெடுக்கும் ஒரு இலக்கினுள், ஒரு குழு பற்றி ஒரு குழுவாக மாறி மாறி பந்தை ஒறுநிலைப் பள்ளியிலிருந்து அடிக்க, அவருக்கு எதிராக உள்ள லக்குக் காவலர் தடுக்க என்று விளையாட்டு தொடரும்.
   ஆட்டம் முடியும் பொழுது, இரண்டு குழுக்களிலும் யார் யார் இருந்து விளையாடிக் கொண்டிருந்தார்களோ, அவர்களில் ஐவரே இந்த ஒருநிலை தனி அடியில் பங்கு பெற முடியும்.

6. முனை (Conrer)

   காக்கும் குழுவினர்கள் கோலிலே பந்து பட்டு, அவா்கள் காக்கும் இலக்கினுள் செல்லாமல், கடைக்கோட்டிற்கு வெளியே சென்று விட்டால், அதற்காகத் தாக்கும் குமுவினா் கடைக்கோட்டில் அல்லது பக்கக்கோட்டில், முனைக்கொடி கம்பத்திலிருந்து 3 கெச துாரம்