பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

இலக்கினுள் செலுத்தும் வாய்ப்பை எளிதாகே அடையவும்.நேரும்.

அத்துடன் ஓடிவரும் எதிராளிகளைப் பார்த்ததும் இலக்குக் காவலருக்கும் இனம்புரியாத குழப்பமு தடுமாற்றமும் நேர்ந்து, பந்தைத் தடுப்பதில் தவறு ஏற்படுவதற்கும் ஏதுவாகும்.

ஆகவே, தாக்கும் குழுவினர் முன் யோசனையுனும், தகுந்த யுக்தியுடனும் தீவிரமாக செயல்பட வேண்டும்.

தடுக்கும் குழுவினர் இத்தகைய இக்கட்டான, நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் வளைகோல் பந்தாட்டத்திலேயே, வெற்றி எண் பெறும் வழிகளில் மிகவும் வாய்ப்பான நிலை தண்ட முனை அடியேயாகும்.

அதனை அறிந்து, தடுக்கும் குழுவினர் பொறுப்புடன் இலக்கினைப் பாதுகாக்க வேண்டும். தடுக்கும் குழுவினரில் தீரமும் தைரியமும் உள்ள ஒருவர் தாக்கி ஆடும் குழுவின் மூன்றாவது ஆட்டக்காரரை நோக்கி அடியை அடித்தவுடனேயே ஓடவேண்டும்.

மற்ற ஆட்டக்காரர்கள் அங்கங்கே நிற்கும் எதிராளியையும் கண்காணித்து, அவர்கள் முன்னேற்றத்தைத் தடை செய்து அவர்கள் முயற்சி வெற்றி பெறா வண்ணம் தடுத்தாடவும் வேண்டும். அதே சமயத்தில், எக்காரணத்தை முன்னிட்டும், இலக்குக் காவலனின் பந்து செல்கின்ற பாதையின் பார்ன்வையை மறைக்காத வண்ணம் ஆடிக்கொண்டிருக்க வேண்டும்.