பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

ஒறுநிலை அடி (Penalty-Stroke)

   தங்கள் இலக்கினுள் பந்து புகுவதைத் தடுத்து விட வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே தகாத வழிகளில் விதிகளையும் மீறிப் பின்பற்றி ஆடுகின்ற தடுக்கும் குழு ஆட்டக்காரர்கள், அடிக்கும் வட்டத்திற்குள் ஆடிவிட்டாலும்; 
   தடுக்கும் குழு ஆட்டக்காரர். இதுபோன்று தவறு இழைத்திரா விட்டால், அந்தப் பந்தானது இலக்கினுள் சென்றிருக்கக்கூடும் என்று நடுவர் கருதினாலும், ‘ஒறு நிலை அடி’ என்ற தண்டனையை நடுவர் எதிர் குழுவுக்கு அளித்து விடுகிறார்.
   இனி, ஒறு நிலை அடி எவ்வாறு எடுக்கப்பட வேண்டும் என்பதைக் காண்போம்.
    கடைக் கோட்டின் மையப் புள்ளியிலிருந்து 8 கெஜத் தூரத்தில் ஆடுகளத்தினுள்ளே குறிக்கப்பட்டிருக்கும் புள்ளியில் பந்தை வைத்து, தாக்கும் குழு ஆட்டக்காரர் ஒருவரால் ஒறுநிலை அடி எடுத்தாடப்படும்.
    இந்த அடியை அடிக்க இருக்கும் ஆட்டக்காரர் பந்தைத் தள்ளலாம்  (push) , மெல்லடி அடிக்கலாம்  (Flick) , குடைந்தாடும் முறையால் தள்ளலாம்.

அவர் பந்துக்கு அருகில் நின்று ஒரே ஒரு காலடி (Stride),வைத்து, முன்னோக்கிப் பந்தை ஒரே முறைதான் அடிக்கலாம். ஒரு முறை கோலால் தொட்டு, அல்லது அடித்தாடியவா், பந்தையோ அல்லது இலக்குக் காவலனையோ அணுகிச் செல்லக்கூடாது.