பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

அல்லது வெளியிலோ தங்கிக் கிடந்தால், அத்துடன் முடிவுநிலை அடி முடிவுறுகிறது.

   ஒறு நிலை அடி எடுக்கப்படும் பொழுது, அடிப்பவரும், தடுப்பவரும் இழைக்கின்ற தவறுகளைப்பற்றியும் அவைகளை அகற்றும் முறைகளைப் பற்றியும் காணலாம்.
   ஒறு நிலை அடி எடுக்கப்படும்வரை, அந்த இருவரைத் தவிர மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் 25 கெஜக் கோட்டிற்கு அப்பால்தான் நின்று கொண்டிருக்க வேண்டும். எந்த முறையிலாவது அவர்கள் வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளக் கூடாது.
   ஒறு நிலை அடி எடுப்பவர், நடுவரின் அனுமதி கிடைத்த பிறகே அடிக்க வேண்டும். பந்து எந்த அளவுக்கும் உயரச் செல்வதுபோலவும் அடிக்கலாம்.
    தாக்குவோர் தவறிழைத்தாலும், ஒறு நிலை அடி வெற்றி எண் பெறாமல் முடிவுற்றாலும், தடுத்தாடும் குழுவினர், கடைக் கோட்டில் இருந்து 16 கெஜ தூரத்தில் வைத்து, தனி அடி எடுக்க மீண்டும் அந்த ஆட்டம் தொடங்கும்.
    தடுப்பவர் தவறிழைத்தால், எதிர்க் குழுவினருக்கு பற்றி எண் அளிக்கப்படும்.
    இரு ஆட்டக்காரர்களும் சேர்ந்தாற்போல் தவறு இழைத்தால், ஒறுநிலை அடியை மீண்டும் எடுக்க வேண்டும்.
    குறிப்பு: ஒறு  நிலை அடியை எடுப்பவர் பதட்டப்படாமல், உணர்ச்சிவசப்படாமல், இலக்குக்கு வெளி-