பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும்.

    இனி, குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களை பல முறைப் படித்து, பாங்காகப் புரிந்துகொண்டு, பழக்கத்திற்கு கொண்டு வரும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 
   குறைகள் நேரலாம், குழப்பம் சேரலாம் என்றாலும் கொண்ட குறிக்கோளை மறக்காது, நல்ல திறன் நுணுக்கங்கள் நிறைந்த நிறைவான ஆட்டம் ஆடவேண்டும் என்ற நெஞ்சுரத்துடன் ஆடவேண்டும்.
   அதைத்தான் வளைகோல் பந்தாட்டம் எல்லா விளையாட்டு வீரர்களிடமும் எதிர்பார்க்கிறது. இலக்குக் காவலராக, கடைக்காப்பாளர்களாக, இடைக்காப்பாளர்களாக, முன்னாட்டக்காரர்களாக பணியாற்றி ஒரு குழுவில் ஒருங்கிணைந்து, ஒன்று பட்டு செயல்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால், நன்கு ஊன்றிப் படித்து. உணர்ந்து தெளிவு கொள்ள வேண்டும்.

1. இலக்குக் காவலா் (Goal-Keeper)

இலக்கினைக் காக்கும் ஒரு குழுவின் காப்பாளர்களில் கடைசி ஆட்டக்காரராக இருப்பதுடன், காக்கும் பொறுப்பில் தலையாய கடமையை மேற்கொண்டிருப்பவரே இலக்குக் காவலராவார்.

குழுவின் ஜீவநாடியே இவர் தான். ஒரு குழுவில் எவ்வளவுதான் திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தாலும், காவல் காக்கத் தெரியாத, திறமையில்லாத இலக்குக் காவலர் ஒருவரை வைத்துக்கொண்டு, அவர்களால் வெற்றியே பெறமுடியாது.