பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

பயிற்சியைக் கெடுப்பதும் இவர்களின் பெருமை தரும் தனியாக அமையும்.

இவர்களால் தான், கடைக்காப்பாளர்களும் இலகக்குக் காவலரும் தைரியமாகவும் உறுதியாகவும் இருந்து, தங்கள் இலக்கைக் காத்து ஆட இயலும்.

எதிர்க் குழுவின் இலக்கினைத் தாக்கி ஆடுகின்ற நிறத்தில், எவ்வளவுதான் முன்னாட்டக்காரா்கள் தோ்ச்சியும் சூழ்ச்சித் திறனும் பெற்றிருந்தாலும், இடைக் காப்பாளர்கள் திறமையற்றவர்களாக இருந்து விட்டால், வாசற் கதவையிழந்த கோட்டையைப் போல் இலக்கு ஆகிவிடும். வாசல் திறந்துவிட்டால் எதிரி உள்ளே புகுந்து விடுவது எளிது தானே?

எனவே, சிறந்த இடைக் காப்பாளர்களால்தான் ஒரு குழு முழுமையும் வலிமையும் பெற்று விளங்குகிறது என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்குகிறதன்றே!

தகுதி: பாய்ந்தோடி வரும் பந்தை பக்குவமாகத் தடுத்து நிறுத்தி முன்னேறித் தாக்கவும், பின்புறம், கடந்து (தன் இலக்கை நோக்கி) வந்து சேர்ந்து, முன்னும் பின்னும் ஒடி ஆடுதற்கேற்றவாறு அமைந்த நெஞ்சுரம் (Stamina), பந்தை வேகமாக அடித்து ஆடுவதைவிட எதிரிகளுக்கு இடையேஏற்படும் இடைவெளி (Gap) பார்த்து பந்தைத் தள்ளிவிடவும்; துாக்கித் தள்ளவும் போன்ற இலாவகம்; எதிரிகளின் நடமாட்டத்தையும் முறை ஆட்டத்தையும் (Method of Play) கண்காணித்து, அதற்கேற்றவாறு ஆடும் தரம் (Skill).