பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

    தன் ஆடும் பகுதியைக் காத்து ஆடுவதும் ஏமாந்து போய்விடாமல் முன்னுணர்வுடன் ஆடும் குணம்  (Anticipation). நல்ல திறமையுடன் கோலினை இயக்கக் கையாளும் முறை (Stick - work). சமயோசிதப்புத்தியுடன் விளையாடும் குணாதிசயங்களுடன் விளங்கி ஈடுகொடுக்க வேண்டியவர்களாக இடைக்காப்பாளர்கள் இருந்து தான் சிறப்புற ஆடலாம். ஆட முடியும். 
    தாக்கி ஆடி முன்னேறும் தமது முன்னாட்டக்காரர்களுக்குப் பக்கபலமாகப் பாய்ந்து சென்று படையெடுத்தல் (Attack). பந்து தன் பகுதிக்கு வர தொடங்கிய உடனேயே கீழிறங்கி வந்து கடைக்காப்பாளர்களுக்குத் துணையாக இருந்து காத்துக் கடனாற்றுதல். இந்த இரு இணையற்ற இரட்டைப் பணியை எழிலுற செய்வதற்கு எத்தனை உடற்திறன் நெஞ்சுத் திறன், நிலைகுலையாத நெஞ்சப்பாங்கு இருக்க வேண்டும்? என்பதை நீங்கள் முன்கூட்டியே பெற முயற்சித்துப் பங்குபெற வேண்டும்.
    ஆடும் முறை: தேவைப்படும் பொழுதுதான் பந்தை விரைவாக அடித்து ஆடவேண்டும். மற்ற சமயங்களில் எல்லாம் பந்தினைப் பாங்கா்களுக்கு (Team-mate) வழங்குவதற்காகத் தள்ளிவிடலாம்; அல்லது தூக்கித் தள்ளலாம். இடைவெளி எங்கு எப்படிக் கிடைக்கிறது என்பதனை உணர்ந்து, அறிந்து தம் பாங்கர்களுக்குத் தன்மையுடன் வழங்குதல்தான்  தகுதியான ஆட்டமுறையாகும். 
    எப்பொழுதும் மைய ஆடுகளத்தை நோக்கியே பந்தினை அனுப்பித் தராமல், ஆடுகளத்தின் வலப்புற இடப்புற பக்கங்களிலே இருக்கும் வெளி ஆட்டக்காரர்-