பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

களுக்கு (in and out) வழங்கி ஆடவேண்டும். அதையும் மிகக் கவனத்துடன் வழங்க வேண்டும்.இதற்கு வலிமையான மணிக்கட்டுகளின் (Wrist) மனம்போல் வளைந்து பணியாற்றும் உடலின்ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

    இனி, தனிப்பட்ட ஒவ்வொரு இடைக்காப்பாளாின் கடமையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
    மைய இடைக் காப்பாளர் (Centre-Half): குழுவுக்கு , உாிமைதானமானவராக இருப்பதுடன், பெரும் பொறுப்பினை  ஏற்றிருக்கும் ஆட்டக்காரராக விளங்குகிறாா். இவருக்கு ‘மைய முன்னுட்டக்கார’ரின் பந்து வழங்கும் மதி நுட்பமும் இடைக் காப்பாளாின் தடுத்தாடி, அடித்தாடும் ஆட்டத் திட்பமும் நிறைய வேண்டும்.
     பந்தைக் கோலினால் கட்டுப்படுத்துதல், விரைவாக ஓடுதல், களைப்பில்லாமல் ஆடுதல்: குழுவினைக் கட்டிக் காத்து வெற்றிக்கரையேறச் செய்யும் விநயம்,விவேகம். எதிரிகளிடமிருந்து பந்தை எளிதாகக் கவர்ந்து கொள்கின்ற தந்திரம்; எடுத்த பந்தை நிலைமைக்கேற்ப, எதிர்க் குழு இலக்கு வரை சென்று பந்தைக் குறி பார்த்து அடித்து விடுகின்ற உரம்; இவருக்கு தேவைக்கு அதிகமாகவே இருந்தால், அது அந்தக் குழு பெற்ற பெரும் பேறாகும். அரிய வரப்பிரசாதமாகும்.

ஆட்டத்தின் வேகத்தையும் விறுவிறுப்பையும் கட்டுப்படுத்திக் காட்டுவதுடன், ஆட்டத்தின் தன்மையையே நிர்ணயிக்கக்கூடிய ஆற்றலையும் இவர் பெற்றிருக்கிறார் என்பதுதான், இவரது முக்கியத்துவத்தின் மேன்மையைக் கோடிட்டுக் காட்டுவதாகும்.