பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

    முன்னாட்டக்காரர்கள் ஐவருடன், இவரும் இடையிடையே சேர்ந்து கொண்டு அறுவராய், எதிர்க்குழு இலக்கினைத் தாக்கும் தன்மை இவரால்தான் தீவிரமாகிறது.
    அதுபோலவே தன் இலக்குப் பகுதிக்கு இறங்கி வந்து (Down) கடைக் காப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு, மூன்றாவது கடைக்காப்பாளராகவும் ஆகி இவர் இலக்கைக் காக்கிறார் என்ற தன்மையால், இவர் இன்னும் அதிக உரம் பெற்ற உடலமைப்புள்ளவராக இருக்கவேண்டும் என்ற உண்மையும் மேலும் உறுதி பெறுகிறது. 
    ஆட்டம் தொடங்கிய உடனேயே, எதிர்க் குழுவின் எந்தப் பாதி ஆட்டக்காரர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றனர் என்பதையும், அந்தப் பகுதிக்குள் எவ்வாறு தமது, முன்னாட்டக்காரர்களை நுழையச் செய்து விளையாடச் செய்யவேண்டும் என்பதை மிகவும் நுணுக்கத்துடன் ஆராய்ந்து அறிந்து கொள்ளும் திறமையால், அவ்வாறே பந்தை வழங்கி, இலக்கை முற்றுகையிட வைப்பது இவரது தலையாய பணியாகும். 
 
    எப்பொழுதும் வெளிப்புற வலது இடது முன்னாட்டக்காரருக்கே பந்தை வழங்கித்தான் இவர் ஆட வேண்டும். அப்பொழுதுதான் எதிராளிகள் முழு பலத்துடன் திறத்துடன், சேர்ந்து ஆடாத நிலை ஏற்படும்.

அத்துடன், தான் முன்னேறிச் சென்று ஆடும்பொழுது, இடப்புறம் வலப்புறம் இருக்கும் சக இடைக்காப்பாளர்கள் இருவரையும் தம் ஆடும் பகுதியைக் (Position) கண்காணித்து காத்து ஆடச் செய்வது