பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


போன்ற சரளமான ஒத்துழைப்புடனும் இவர் ஆட வேண்டும்.

மேலும் பந்தெடுத்துக் கொண்டு பாய்ந்து வரும் எதிராளியிடம் அணுகுகின்ற முறையில், அவரைத் தாக்கிப் பந்தைக் கவர்ந்துகொள்கின்ற முயற்சியில், பந்து இந்தப் பக்கம்தான் வரும், அவர்கள் இப்படித் நான் ஆடுவார்கள் என்று யூகித்து உணரும் முன்னறிவில் நல்ல அனுபவத்தையும் வளர்த்துக் கொண்டால், இவர் ஆட்டம் இன்னும் சிறப்பாக, அமையும்.

புல்லியெடுத்து (Bully) ஆட்டம் தொடங்கியவுடன் இவரது கடமையும் கண் விழித்துக் கொள்கிறது. இவரது கைக்குப் பந்து கிடைத்துவிட்டால், இவரது முன்னாட்டக்காரர்கள் எல்லோரும், தங்களுக்குப் பந்து உடனே வழங்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் முன்னேறத் தயாராக இருப்பார்கள். அந்த நேரத்தில், இவர் தானே பந்தினை உருட்டிக் கொண்டிராமல் (Dribble) , நேரங்கடத்தாமல், நிலைமையை சிக்கலாக்காமல், உடனே இடைவெளி பார்த்து வழங்கவேண்டும். அத்துடன், சற்று முன்பாகவே பந்தை உருட்டி ஓடச் செய்து, அவர்களை ஒடிப்போய் பந்தை எடுத்து ஆடுமாறும் தூண்ட வேண்டும்.

தானே தனியாக பந்தை உருட்டி ஆடிக்கொண்டிருந்தால், அது தன் குழுவையும் பாதிக்கும். வெற்றியையும் தடுக்கும். ஆகவே, பந்தை தேவை அறிந்து, முதல் பந்தாக (First Ball) பாங்கருக்கு வழங்கும் பண்பும் பயிற்சியும் பெருங் குணமும் இவருக்கு நிறைய வேண்டும்.