பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


   வெளிப்புற (Wing) ஆட்டக்காரா் எப்பொழுதும், பந்தை பக்கக்கோடு (Side Line) வரை உருட்டிக் கொண்டு சென்று, அங்கிருந்து இலக்கை நோக்கி அடித்துவிடவேண்டும். அவ்வாறு அடிபட்டு வரும் பந்தை உள்ளாட்டக்காரா் (In), மைய ஆட்டக்காரர், இடப்புற உள்வெளி ஆட்டக்காரா்கள் அனைவரும் கோல்களால் வந்து சந்தித்து ஆடும் ஆட்டமே, சாகசம் நிறைந்த ஆட்டமாகும்.
  அவ்வாறு பந்தை அடித்து அனுப்புகின்ற வெளிப்புற ஆட்டக்காரா், மிகவும் வேகமில்லாமல் அதே சமயத்தில் தமது பாங்கா்கள் பந்தாடும் வகையில், சரியான இடத்தில் சரியான சமயத்தில் குறிபார்த்து, நெறி பார்த்து அடித்தாட வாய்ப்பு ஏற்படும் வண்ணம் பாங்கரைத் துண்டும் நிலையில் ஆடத் துாண்ட வேண்டும்.
  தானே இலக்கினுள் பந்தைக் கொண்டுவந்து அடிக்க வேண்டும் என்ற நப்பாசை, நச்சாசை முன்னாட்டக்காரா்களுக்கு என்றும் இருக்கவே கூடாது.
  யாருக்குப் பந்தை அடிக்க வாய்ப்பு இருக்கின்றதோ, அவருக்கு வழங்கித் தந்து ஆடவேண்டி யதுதான் முறையான ஆட்டமாகும். கிறைவான ஆட்டமுங்கூட.

  இடப்புறமாக இருந்து விளையாடுபவர்கள் (Left out) பந்தைப் பெற்றவுடன், உருட்டிக் கொண்டே கடைக்கோடு வரை செல்லாமல், அதற்குக் கொஞ்சம் முன்னதாகவே, இலக்கை நோக்கி அடிக்கும் வட்டத்திற்குள்ளே பந்து போகுமாறு நேரம் பார்த்து, அடித்து அனுப்பிவிட வேண்டும்.

வளைகோல்-6