பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


அதுவும் நடுவரிடம் முன் கூட்டியே அறிவித்து அனுமதியும் பெற்றிருந்தால் மட்டுமே, மாற்றங்கள் மாற்றிக் கொள்ளலாம். * - ஆட்டத்தின் நோக்கம் : எதிர்க் குழுவினருக்குள் இலக்கினுள்ளே, (இரண்டு கம்பங்களுக்கு நடுவில் குறுக்குக் கம்பத்திற்குக் கீழே, கடைக்கோட்டை கடந்து) பந்தை அனுப்புவதே ஆட்டத்தின் முக்கிய நோக்கமாகும், இலக்கினுள் பந்து எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை வெற்றி எண் என்ற பகுதியில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். 3. பந்தை அடித்தாடும் விதமும் இதமும் (Hitting the Ball) பந்தைத் தொடர்ந்து ஓடுவது எளிது. அதற்கு களைத்துப் போகாத கட்டுடலும் நெஞ்சுரமும் (Stamina, வேண்டும். ஆனால் அடித்தாடுவதற்குத் தகுந்த திறமும் திறம் சேர்ந்த இதமும், இதம் நிறைந்த விதமும் நிறையவேண்டும். பந்தை அடிப்பதற்கு முன், விழி இரண்டும் பந்தின் மேலேயே பாங்காகப் பதிந்திருப்பது முக்கியமாகும் ஏனென்றால், கோலின் பட்டையான பாகத்தினுள் பந்தை வேகமாக வலிமையுடன் அடிக்கும்பொழுது குறி தவறி விடும். நெறியும் விலகி விடும். அதுமட்டுமல்ல. பந்தை அடிப்பதற்கு முன்னும் பந்தை அடித்ததற்குப் பின்னும் தோள்களின் அளவுஉயரத்திற்கு மேலே,கோலை உயர்த்தி விடுவதற்கு ஏதுவான சூழ்நிலை அமைந்தால், அதுவே தவருகிவிடும்