பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


கட்டின் வலிமையும் சேர்ந்து பந்தை விரும்பிய திசைக்கு ஆப்படியே தள்ளி விடுவதே இதன் வேலையாகும். மின்னலடியை எவ்வாறு அடிப்பது என்றல் பந்தின் பின்புறத்தில், கோலின் தட்டையான பாகத்தை ஒட்டி வைத்து, அப்படியே மணிக்கட்டின் பலத்துடன் முன்புறமாக உந்தித் தள்ள வேண்டியது தான். இதற்கு நுண்ணிய திறமை வேண்டும். லாவகமும் வேண்டும். இவ்வாறு ஆடுவதால் என்ன பயன் என்று தெரிந்து கொண்டால், இதனே மேலும் விருத்திச் செய்து கொள்கின்ற ஆர்வம் மேலோங்கி வரும். பலமாகப் பந்தை ஓங்கி அடித்து நேரத்தை வினுக்காமல், விரும்பிய இடத்திற்கு விரைந்து தள்ளுவதால், பந்து குறித்த இடத்திற்கு குறிப்பாக அனுப்பப் பயன்படுகிறது. எதிரிகளைத் தாக்கிப் பந்தை இழக்காமல் முன் நோக்கித் தள்ளி ஆடும்போதும், முன்னேறிவரும் எதிராளியின்பந்தைத் தடுத்து ஆடும்பொழுதும், எதிரி பலர் சூழ்ந்திருக்கும்பொழுது பந்தை அங்கிருந்து வெளியேற்றினால்தான் தங்கள் இலக்குத் தாக்கப்படாமல் காப்பாற்றப்படும் என்ற சூழ்நிலையிலும் காலங் தாழ்த்தாமல், பந்து தமது கட்டுப்பாட்டிலிருந்து நழுவாமல் குறி வழுவாமல் விரைந்து அனுப்பப் பயன் படுகிறது. எல்லா - முன்னுட்டக்காரர்களுக்கும் இந்த மின்னலடி முறையில் நன்கு பயிற்சியும் பழக்கமும் இருந்தால், ஆட்டத்தைக் காண்பவர்களுக்கும் அருமையான காட்சியாக அமைந்திருக்கும்.