பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டியும் முதலும் 145 "அப்படியானல் நான் பொய் சொல்கிறேளுக்கும்? இறங்கம்மா கீழே. உங்களுக்கெல்லாம் நல்ல தனமாகச் சொன்னல் தெரியாது. டிரைவர், ஹோல்டான்” என்று சடசடவென்று வார்த்தைகளைக் கொட்டினன் கண்டக்டர். கமலாவுக்கு உடம்பு படபடவென்று வந்தது. கண்டக்டர் வெறி பிடித்தவனைப் போலப் பேசுவதை அவள் சகிக்கவில்லை. அவள் என்ன செய்ய முடியும்? உடம் பெல்லாம் கூசியது. கூனிக் குறுகி கின்ருள். இறங்குவதா, வேண்டாமா? என்ற யோசனையில் ஈடுபட்டாள். அதற்கு நேரம் ஏது? "என்னம்மா, சும்மா விற்கிருய்?" என்று உறுமிஞன் கண்டக்டர். . - அவள் கண்களில் நீர் புறப்பட்டது. அதைக் கையால் மறைத்துக் கொண்டாள். . அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது. என் ஐயா, சும்மா கத்துகிருய் எத்தனே ஐயா, தரவேணும்?" என்று மிடுக்கான தொனியோடு வந்தது கேள்வி. "இரண்டனக் காசுங்க' என்று ஏளனத் தொனி யோடு பேசினன் கண்டக்டர். - - 'இதுதானே? இங்தா, வாங்கிக் கொள்' என்று அவன் நீட்டினன். கண்டக்டர் வாய் அதோடு அடைத்து விட்டது. - - கமலா மெல்லத் தலையெடுத்துப் பார்த்தாள். இருபது இருபத்திரண்டு வயசுள்ள ஆணழகன் ஒருவன் அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பதைக் கண்டாள். தலையைச் சிறிது தாழ்த்தி, "தாங்க்ஸ்' என்று சொன்னபடியே அவனிடம் ஐந்து ரூபாயை நீட்டினள். "பரவாயில்லே. இரண்டளு ஒரு பிரமாதம் இல்லை" என்ருன் இளைஞன். . வ-செ-10