பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

இராமானியர்களிடம் கிரேக்கம் அடிமையானபோது, மாறிப் போய்விட்டது. ரோமானியர்களும் ஒலிம்பிக் பந்தயங்களில் பங்குபெற்றனர்.அத்துடன் கில்லாது.ரோம்சாம்ராஜ்யத்தை ஆண்ட நீரோமன்னன் நிகழ்த்திய ஒலிம்பிக் ஊழல் நிகழ்ச்சிக்குப்பிறகு, பந்தயங்கள் பெருமை இழந்து, பூசலுக்கும் ஏசலுக்கும் இடம் தரும் சந்தைக் களமாக மாறி வீழ்ந்தன.

தட்டுப்பட்டத் தட்டு

எல்லாவற்றிற்கும் உச்ச க் க ட் ட மாக, முதலாம் தியோடசிஸ் என்ற ரோம் நாட்டு மன்னன் கி.பி. 394ம் ஆண்டு, ஒலிம்பிக் பந்தயங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்ததுமல்லாமல். மூடியே விட்டான். ஒலிம்பிக் பந்தயங்கள் அழிந்தன. ஒழிந்தன. வேரோடு அழிந்து மறைந்தன. ஆலுைம் மக்கள் மனதிலிருந்து றுேபூத்த நெருப்பாக புகைந்துகொண்டுதான் இருந்தன.*

ஒலிம்பிக் பந்தயங்களில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக விளங்கியது தட்டெறியும் போட்டி தான் (Discus). தட்டெறியும் போட்டியில் வெற்றி பெறும் வீரனேயே சிறந்த வீரன் என்று போற்றிப் புகழ்ந்த வரலாறும் உண்டு. ஒலிம்பிக் பந்தயத்தின் சின்னமும் தட்டெறியும் வீரன் சிற்பது போல்தான். ஆகவே, தட்டெறியும் சிகழ்ச்சியானது. விளையாட்டுக்களில் ஆர்வமும் ஆசையும் நிறைந்துள்ள ரசிகர்களின் மத்தியிலே சிறந்த ஓர் இடத்தைப் பெற்றிருந்ததுதான்.

வளையப் பந்தாட்டத்திற்கும், ஒலிம்பிக் பந்தயத்தில் தட்டெறியும் நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் உண்டு

  • ஒலிம்பிக் பந்தயத்தின் கதை எனும் எனது நூலில் விளக்கம் காணலாம்.