பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

20வது வெற்றி எண்ணை முதலில் வென்று 21வது வெற்றி எண்ணேப் பெறுகிற ஒரு ஆட்டக்காரர் அல்லது ஒரு குழு, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

இரண்டு குழுவினரும் 20வது வெற்றி எண்களில் சமமாக இருந்தால், முதல் இரண்டு வெற்றி எண்களை எதிர்க் குழுவைவிட முதலில் பெறுகிற குழுவே வெற்றி பெற் தென்று அறிவிக்கப்படும். -

20 வெற்றி எண்களுக்கு முன்னல், ஒற்றையர் ஆட்டத்தில் தொடர்ந்தாற்போல் 5 தடவை சர்வீஸ் போட்டு ஆடவேண்டும் என்று முன்னர் கூறிய விதிமுறையை ங்ேகள் படித் கிர்கள். 20வது வெற்றி எண்ணில், இருவரும் சமமாக இருக்கும்போது, ஒரே ஒருமுறை தான் ஒருவர் சர்வீஸ் போடவேண்டும். ஒருவர் மாற்றி ஒருவர் (Alternate Service) ஒரு முறை சர்வீஸ் போட்டு ஆடும்போது இரண்டு வெற்றி எண்களையும் தொடர்ந்தாற்போல் அடைபவரே வெற்றி பெற்றவராவார்.

அதாவது, ஒரு போட்டி ஆட்டத்தில் வெற்றிபேற. ஒருவர் 20 வெற்றி எண்களுக்குமேல். 2 வெற்றி எண்களை அதிகமாகப் பெற்றிருக்க வேண்டும்.

இனி இரட்டையர் ஆட்டம் ஆடுகிற முறையினைக் கவனிப்போம்.

ஒரு குழுவின் ஆட்டக்காரர்கள் இருவருக்கும் 1, 2 என்ற ஆட்ட எண்களையும். எதிர்க்குழு ஆட்டக்காரர் களுக்கு 3,4 என்ற ஆட்ட எண்களையும் கொடுத்திருப்பதாகக் கொள்வோம். ==

o 1ம் எண்ணுள்ள ஆட்டக்காரர் முதலில் சர்வீஸ் போடுகிருர். எதிர்க்குழுவில் வலது கைப்புறத்தில் 3ம் எண்ணும் 1க்கு நேராக 4ம் எண்ணும் இருக்கிறதாகவும்