பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

3. வளையம் வேகமாக வரும்போது, உடனே அதைப் பிடித்துவிட முயலக் கூடாது. கிரிக்கெட் . ஆட்டக்காரர் வேகமாக வரும் பங்தை எளிதாக ஏந்திப் பிடிப்பற்காகச் கையாளும் முறைபோல, தளர்ச்சியுற்ற வேகம் கொண்ட தாக தங்கள் கைக்கு வளையத்தை வரவிட வேண்டும். அது தான், இலாவகமாக வளையத்தைப் பிடிக்கும் முறையாகும்

4. வளையத்தை எறிவதிலும் சரி, அல்லது எறிந்து வழங்குவதிலும் சரி, கையை உயரே வைத்து, கையுயர்த்தி எறிகின்ற (Over hand) முறையை, எந்த விதத்திலும் எந்த உருவத்திலும் பயன்படுத்தக் கூடாது.

3. வலையை ஒட்டியவாறு இருந்து, வரும் வளையத்தைப் பிடித்து அனுப்ப முயற்சி செய்யும்பொழுது, கையை உயரே துர்க்கி எறியக்கூடிய உணர்வில்ை உந்தப்படுவது இயற்கை தான். அதை கட்டாயமாகத் தவிர்த்து ஆடுவதுதான் கெட்டிக்காரத்தனமாகும். அதற்குரிய தேவையான ஆட்டப் பயிற்சிகளைப் பயின்று, அதை தவிர்த்துவிட வேண்டும்.

6. குறைந்தது 6 அங்குலமாவது உயர்ந்த அளவு உயரே வளையம் செல்வதுபோல்தான்:வளையத்தை எறிந்து வழங்குவது அல்லது விளையாடுவது இருக்க வேண்டும்.

7. வளையத்தை எடுத்தாடுவது உயரத்தில்இருந்தாலும் சரி, அல்லது தாழ் நிலையில் கீழாக" இருந்தாலும் சரி. எறிந்து விளையாடும்போது 6 அங்குலம் உயர்ந்து செல்வது. போன்ற (Position) (எறிந்திடும் தன்மையில்) கவனம் செலுத்தியே ஆடவேண்டும்.

8. ஏமாற்றி ஆடுதல் அல்லது எறிவதாகப் பாவனை செய்தல் அல்லது சற்று தயங்கி காமப்படுத்தி வளையத்திை ஆடுவதுபோன்ற ஆட்டமுறைகள் அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு செய்யும்போது உங்கள்.எதிராட்டக்காரருக்கு ஒரு வெற்றி எண் (Point) கிடைக்கிறது, அதே சமயத்தில்