பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

(Fast Game) மாறி வந்திருப்பதால், அதற்கேற்றவாறு: விதிகளும் மாறிக்கொண்டுதான் வந்திருக்கின்றன.

ஆகவே, புதிய விதிகளே ஆட்டக்காரர்கள் ஏற்றுக் கொண்டால்தான், மாநில அளவிலே, தேசிய அளவிலே போட்டிக்குப் பங்குபெற முடியும். இந்தக் கருத்தினேக் கொண்டு நண்பர் திரு. இராமமுர்த்தி அவர்களிடம் அணுகியபோது, புதிய விதிமுறைகள் பற்றிய விளக்கங். களே மிகவும் அன்புடன் விவரித்து உதவினர்கள். இந்த நேரத்தில் அவரது அன்புக்கும் ஆதரவான உதவிக்கும் என் அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன். ari

1965ம் ஆண்டு அகில இந்திய வளையப் பந்தாட்டக்கழகம் உருவாகி, இதுவரை 5 தேசிய அளவு போட்டிகள் கடை பெற்றிருக்கின்றன. தமிழக மாகிலப் போட்டிகளும் ஐந்து முறை வெற்றிகரமாக கடத்தப்பெற்றிருக்கின்றன. இத் தகைய அரிய சாதனையை ஜனப் சங்கு அவர்களும். P. இராமமூர்த்தி அவர்களும் செய்து, வளையப்பந்தாட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக வந்திருக்கிருர்கள்.

பள்ளிகளில் மாணவ மாணவிகள் பெரிதும் விரும்பி விளையாடுகின்ற வளையப் பந்தாட்டம், மேலும் சிறப்புறும் வளர்ச்சியடையும் வடிவம் பெற்று வருகிறது. -

எல்லோரும் விரும்பி ஆடுகின்ற எளிய இனிய ஆட்ட மான வளையப் பந்தாட்டத்தை, நாடிச் சென்று விளையாடிப் பயன்பெற இந் நூல் உதவும் என்ற நம்பிக்கையில் உங்கள் கையில் அளிக்கிறேன். s - ..

எமது நூல்களே ஆதரித்து அன்பு காட்டும் அனைவருக் கும் என் இனிய வணக்கங்களைப் படைக்கிறேன்.

அழகுற அச்சிட்டு உதவிய திரு. மணி அவர்களுக்கும். ஆக்க பூர்வமான உதவிகளே அளித்து வரும் திரு சாக்ரடீஸ் அவர்களுக்கும் என் அன்பு நன்றி! . .

அாஆஇம் எஸ். கவராஜ் செல்லையா