பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


5. பட்டினியோடு திண்ணையில் படுத்து உறங்கிய போது, அண்ணியார் வடிவில் வந்து இறைவி அவருக்கு உணவளித்தது. 6. சிறு வயதிலேயே துறவு பூண்டு மீண்டது. 7. இளமையில் அண்ணன் சொற்பொழிவுக்கு ஏடு படிக்கத் தொடங்கி, அவர் ஒப்புக் கொண்ட சொற்பொழி வுக்கு நோய்வாய்ப்பட்டுப் போக முடியாதிருந்த போது, தான் சென்று அக்சொற்பொழிவை நிகழ்த்தி, மக்களின் பாராட்டைப் பெற்றது. 8. பிறகு ஊர் மக்கள் அவர் தமையனிடம் சென்று, இனித் தம்பியையே சொற்பொழிவுக்கு அனுப்புங்கள் என்று கேட்கும் நிலை வந்தது. 9. திருவொற்றியூரில் வள்ளலார் நடந்து சென்ற போது, "இதோ ஒரு மனிதன் போகிறான்' என்று ஒரு ஞானி மகிழ்ந்து கூறியது. 10. தண்ணிரில் விளக்கு எரித்தது. 11. ஒரே இரவில் 1596 வரிகளையுடைய அருட் பெருஞ்சோதி அகவலைப் பாடி, முடித்தது. 12. பொருளாசை சிறிதும் கொள்ளாது, "பணத் திலே சிறிதும் ஆசை ஒன்றிலேன், நான் படைத்த அப் பணங்களை பலகால் கிணற்றிலே எறிந்தேன், குளத்திலும் எறிந்தேன், கேணியில் எறிந்தனன் எந்தாய்' என்று கூறிப் பணத்தை எறிந்து வந்தது. காராலும், கனலாலும், காற்றாலும், ககனக் கலை தடுக்கப் படுதலிலாத் தனி வடிவம் அளித்தாய்! எனவும்,