பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


3. அவர் பிரும்ம ஞான சங்கத்தாருக்கு 1882-ல் கொடுத்த வாக்கு மூலம். 4. தென்னாற்காடு மாவட்ட கெஸ்ட் 1906-ம் ஆண்டு. 5. பாலகிருஷ்ணப் பிள்ளை பதிப்பித்த அருட்பாவில் காணப்படும் சில குறிப்புக்கள். 6. ஊரன் அடிகளார் பதிப்பித்த அடிகளார் வரலாறு ஆகியவைகளால் அவரது வரலாற்றை இன்னும் விரிவாகக் காணலாம். இதுகாறும் கூறியவை மிகவும் சுருக்கமானவை. 15. சன்மார்க்கம் என்பதன் பொருள் 1. சன்மார்க்கம் என்பது நல்வழி எனவும், நன்னெறி எனவும் பொருள்படும். 2. சுத்த சன்மார்க்கம் என்பது தூய்மையான நல்ல வழி எனவும், சத்திய சன்மார்க்கம் என்பது உண்மையான, நல்லவழி எனவும் பொருள்படும். இவையே இறைவனை அடையும் எளிய வழிகள் என்பது வள்ளலார் கருத்து. - 3. "தங்கமே யனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கம்' என்பது பிள்ளைச்சிறு விண்ணப்பத்தில் ஒரு அடி, இது சன்மார்க்கத்தினருக்கும் மற்ற மார்க்கத்தின ருக்கும் வேற்றுமையைக் காட்டுவதாகும். செம்பும் தங்கமும் ஒரே இனம். ஆனால் செம்பில் களிம்பு உண்டு; தங்கத்தில் களிம்பு இல்லை என்பதுதான் வேற்றுமை. செம்பிலே உள்ள களிம்பு நீங்கிவிட்டால் அது தங்கமாகி விடுகிறது. சன்மார்க்கிகள் மனஅழுக்கு நீங்கியவர்கள். ஆதலால் அவர்கள் 'தங்கமே அனையார்' ஆகின்றனர் என்று தெரிய வருகிறது.