பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16

 'சிதம்பரமே' என்ற அருட்யா எழுதப் பெற்றிருக்கிறது. இதில் ஒரு பெருநெறி வருகிறது.

'சிறுநெறி செலுத்தாது தடுத்தெனையாண்டு பெரு நெறி செலுத்தியோன்' என இறைவனைக் குறிப்பிடுகிறார். இங்கும் ஒரு பெருநெறி.

மற்ற நெறிகளுக்குப் பொருள் தெரிகின்றன. பெரு நெறி என்றால் என்ன? எனில், பெரிய நெறி' எனக் கூறி விடலாம். 'பெருநெறி என்பது எது?’ என்றால் என்ன கூறுவது?

அருட்பாவில் உள்ள தெய்வமணிமாலையில், 'ஒருமை யுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்"-இது உறவு நெறி. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’-இது வஞ்ச நெறி. பெருமை பெறு நினதுபுகழ் பேச வேண்டும்' -இது பக்திநெறி. 'பொய்மை பேசாதிருக்க வேண்டும்”...இது வாய்மை நெறி. பெருநெறி பிடித்தொழுக வேண்டும்’இங்கும் ஒரு பெருநெறி, "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’-இது சமயநெறி, "மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்’-இது துறவுநெறி. உனை மறவா திருக்க வேண்டும்’-இது யோக நெறி. "மதிவேண்டும்"இது அறிவுநெறி. 'நின் கருணைநிதி வேண்டும்’-இது கருணைநெறி. நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்'இது சுகாதார நெறி. இவற்றுள் பெரு நெறி என்றால் எது? புரியவில்லை.

பெருநெறி என்பது நான்கு எழுத்துக்களில் உள்ள இரண்டு சொற்களைக் கொண்ட ஒரு சிறு சொற்றொடர், இதனை வள்ளலாருக்கு முன்பு உள்ள சான்றோர்கள் எவரும் கையாண்டதாகக் கேள்விப் படவில்லை. பழந்தமிழ்