பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


வள்ளலார் கருத்து அதுவல்ல. அவர் உயிரினங்களை யெல்லாம் இரண்டாகப் பிரிக்கிறார். ஒன்று தட்டைப்பல் இனம், மற்றொன்று கோரைப்பல் இனம். தட்டைப்பல் இனங்கள் யானை, ஒட்டகம், குதிரை, மாடு, கழுதை, மான் ஆடு முதலியன. இவை "உயிர்க்கொலையும் புலைப் புசிப்பும்" உடையன அல்ல. கோரைப்பல் இனங்கள் சிங்கம், சிறுத்தை, புலி, கரடி ஒநாய், நரி, நாய் முதலியன. இவை கள் அனைத்தும் கோரைப் பற்களாகிய கொக்கிப் பற்களை உடையன. இவை அனைத்தும் 'உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும்” உடையன. இவைகளால் புல் உணவை உண்ண முடியாது. உண்ண விரும்பினாலும், அவற்றின் பற்கள் அவைகளுக்குத் துனை செய்யா. மக்களாய்ப் பிறந்தவர்களுள் உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்களானால், அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களல்ல, கோரைப் பற்களையுடைய விலங்கினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வள்ளலாரின் கருத்து. இதிலிருந்து உறவினம், பிற இனம் என்பதற்கு, தட்டைப்பல் இனம், கோரைப்பல் இனம் எனப் பொருள் கூறுவதே சிறந்தது எனத் தெரிகிறது. கழுதையானது தட்டைப்பல் உடைய மக்கள் இனத் தைச் சேர்ந்தது. அதற்கு எவ்வளவு பசித்தாலும், எதை எதையோ தின்றாலும், இறைச்சியைத் தின்னாது. அதுவே உண்ணாத பொருளை மனிதர் உண்ணலாமா? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. சிந்தித்தால் மனிதரது பற்களின் இயற்கை அமைப்பே இறைச்சியைத் தின்பதற்கல்ல என அறியலாம். - 5. ஒரு மாணாக்கன் தவம் செய்ய விரும்பி அதற்குரிய வழிகளை அறிய தவமுனிவர் ஒருவரிடம் சென்றான். அவர் இப் பையனுடைய இளம் வயதை எண்ணி, தவம் செய்