பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அருட்பா 1. அருட்பாவின் சிறப்பு தமிழகத்தில் நான்கு நூல்களுக்குத் தனித்தனியான சிறப்புகள் உள்ளன. முதல் சிறப்பு பகவத் கீதைக்கு; அது மனிதன் கேட்க கடவுள் சொன்னது என்பதால், இரண்டாவது சிறப்பு திருவாசகத்திற்கு; இது கடவுள் கேட்க மனிதன் சொன்னது என்பதால், மூன்றாவது சிறப்பு திருக்குறளுக்கு, அது மனிதன் கேட்க மனிதன் சொன்னது என்பதால். நான்காவது சிறப்பு அருட்பாவிற்கு. இது மனிதரிலும் அருளாளர்கள் கேட்க அருளாளன் கூறியது என்பதால். இச்சிறப்பு அருட்யாவிற்குப் பெருஞ் சிறப்பைத் தருவதாகும். 2. பெயர்ச் சிறப்பு தமிழ்நூல்களில் ஐந்து நூல்கள் தன் பெயரையே தமக்குச் சிறப்பாகப் பெற்றுத் திகழ்கின்றன. 1. மந்திரங்கள் பல. திரு சேர்ந்த மந்திரம் ஒன்றே ஒன்று; அது, திருமந்திரம். 2. வாசகங்கள் பல. நானும் நீங்களும் பேசுவதெல்லாம் வாசகம் தான். ஆனால் திரு சேர்ந்த வாசகம் ஒன்றே ஒன்று. அது திருவாசகம்,