பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி, உன்ளே ஒத்துரிமை உடையவராய் 2.வக் கின்றார் யாவர், அவருளங்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் - நடம் புரியும் இடம் எனத் தேர்ந்தேன் என்ற அருட்பா. இப் பாடலில் எத்துணையும் என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் உள்ளன. ஒன்று எந்த அளவும் என்பது; மற் றொன்று எள் அளவும் என்பது. அப்படி எள் அளவும் பேதமுறாமல், வேற்றுமையுறாமல் எல்லா உயிர்களையும் தம் உயிரைப் போலக் கருதுகின்ற மக்கள் உள்ளந்தான் இறைவன் குடிகொள்ளும் இடம் என்று இந்த அருட்பா முடிவுகட்டிக் கூறுகிறது. இக் கருத்தைத் தெளிவாக அனுபவ மாலையில் உள்ள நூறு பாடல்கள் விளக்கிக் கொண்டிருக்கின்றன. அதில், தானும் இறைவனும் கலந்த நிலையை ஒரு பா கூறுகிறது. یgllلاقے அறியாத பருவத்தே எனை வலிந்து அழைத்தே ஆடல் செய்யும் திருவடிக்கே பாடல் செயப் பணித்தார் செறியாத மனச் சிறியேன் செய்த பிழையெல்லாம் திருவிளையாட் டெனக்கொண்டேதிருமாலை யணிந்தார் பிரியாம லென்னுயிரில் கலந்து கலந்து இனிக்கும் பெருங் தலைவர் நடராஜர் என்பது. 5. ஆட்சி நாடுகளை ஆட்சி புரிகிறவர்கள் இறைப்பற்று உள்ள நன்மக்களாக இருக்க வேண்டும் என்பது, வள்ளலார் முடிவு. அப்படிப்பட்ட ஆட்சி உலகமெல்லாம் நிலவ வேண்டும் என்று வள்ளலார் பெரிதும் விரும்பி வாழ்த்து கிறார். அது மட்டுமல்ல, அது இல்லாத ஆட்சிகள் அனைத்