பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


தும் ஒழிய வேண்டும் என்றும் கருதுகிறார். இக் கருத்தினை அருட்பாவின் 56 18-வது பாடல் அடியிற் கண்டவாறு கூறுகிறது. கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக அருள்கயங் த கன்மார்க்கர் ஆள்க-தெருள்கயங்த கல்லோர் கினைத்த கலம் பெறுகான்று கினைந்து எல்லோரும் வாழ்க இசைந்து 6. வணங்குதல் பிறரைக் கண்டால் உடனே வணங்க வேண்டும். அதுவும் அவர்கள் வணங்கும் முன்னே நாம் வணங்க வேண்டும் என்று வள்ளலார் கருதுகிறார். இக் கருத்தையே நபிகள் நாயகம் அவர்களும் சலாம் செய்வதில் முந்திக்கொள் என்று கூறியிருக்கிறார். மற்றவர்கள் கைகூப்பிய பின்னருங்கூட மரியாதைக் காகக் கூப்பாத கைகளை வள்ளலார் கொடுங்கைகள்' என்று சாடுகிறார். இக்கருத்தை 'அடுத்தவர் கரங்கள் கூப்பினும் கூப்பாக் கொடுங்கை’ என 3344-வது பாடல் கூறுகிறது. 7. வட்டி 335i-வது பாடல் சமுதாயத்திலுள்ள மக்களின் போக்கைச் சாடுகிறது. வட்டியைப் பெருக்கி ஏழைகளின் மனைகளைக் கவர்வதும் ஒட்டைச் சட்டியைப் பிறர் வைத் திருந்தாலும் அதைக் கண்டு பொறாமை கொள்வதும், சூதுகள் நிறைந்த மனதைப் பெறுவதும், நல்லவர்கள் பெரியவர்கள் மனம் வெறுக்கும்படி நடப்பதும் தவறு என்று கண்டிக்கிறார். அதைப் பிறர் செய்வதாக இல்லா மல் தன் மேல் ஏற்றி, அப்படிப்பட்ட என்னை, இறைவா