பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


“தருண நிதியே! என்றும், “தருணத்திற்கு ஏற்றவா’ என்றும் அழைத்து, நினையடையும் தருணம் இஞ்ஞான்றே என்றும் வற்புறுத்துகிறது. அருட்பாவில் உள்ள 5818 பாடல்களில், ஒவ்வொரு பாடலைப் பற்றியும், ஒவ்வொரு அடியைப் பற்றியும், ஏன் ஒவ்வொரு சொற்றொடரைப் பற்றியும் கூட ஒவ்வொரு நாள் பேசலாம். அவ்வளவு ஆழமானவை அவருடைய பாடல்கள். இனி “அருட்பாவில் ஒரு அடி' பற்றிச் சில : இக் காலத்தில் சிலர் வள்ளலார்மீது தவறான கருத் துக்களைப் பரப்பி வருகின்றனர். அதுவும் அவர் புராணங் களை வெறுப்பவர் எனவும், சமயங்களை மறுப்பவர் எனவும், நாத்திகர் எனவும் தூற்றுவதாகும். இது வேண்டுமென்றே சிலர் செய்யும் தவறுகள். இது சாதிபேதங்களை அவர் ஒழிப்பதாலும், மூடப் பழக்க வழக்கங்களை அவர் வெறுப்ப தாலும், சிலர் மனம் பொறாது, இத் தவறான கூற்றுக் களைப் பரப்பி வருகின்றனர். இக் கூற்றுக்கள் அனைத்தும் உண்மையல்ல. அவர் சிறந்த ஆத்திகர், ஒரு நல்ல பாரம் பரிய மரபைத் தழுவியவர் என்பதை மெய்ப்பிக்க அடியிற் கண்டவைகளை உங்கள் முன் வைக்கிறேன். 1. அகச் சான்று இது அருட்பாவின் ஒரு பாவில் உள்ள ஒரு அடியில் உள்ள ஒரு சொற்றோடர். அது 'வாழையடி வாழை" வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ? என்பது. -