பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


திரு மூலர் (அ) திருமந்திரத்தில் முதல் தந்திரம் 137-வது பாடலில், 'திருவடியே சிவமாகும், திருவடியே சிவலோகம் சித்திக்கும், திருவடியே செல்லும் கதி, திருவடியே தஞ்சம்' எனக் கூறியுள்ளார். இறைவனை வணங்க அவனது திருவடி யைப் பற்றுக் கோடாகக் கொள்ளவேண்டும். இது திருமூலர் கருத்து. (ஆ) இநனைவே திருவள்ளுவரும் பின்பற்றித் திருக் குறளில், முதல் அத்தியாயத்தில், இறை வணக்கத்தில் உள்ள பத்துக்குறள்களில் ஏழு குறள்களில் திருவடியையே கூறியிருக்கிறார். நான்கு குறள்களில் தாள்கள். அவை "வாலறிவன் நற்றாள், தனக்குவமை இல்லாதான் தாள், அறவழி அந்தணன் தாள், எண் குணத்தான் தாள்' என நான்கு மூன்று குறள்களில் அடி, அவை "மலர்மிசை ஏகி னான் மாணடி, வேண்டுதல் வேண்டாமை இலான் அடி, இறைவன் அடி ஆகிய மூன்று. ஆக திருவடி ஏழு. (இ) பின்னர் இம்மரபில் தோன்றிய மணிவாசகர் விடுவாரா? திருவடியை. திருவாசகத்தில் முதல்பகுதியில் சிவபுராணத்தில் இறைவணக்கம் செலுத்தும் பொழுது 'நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, கோழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க, ஆகமமாகி நின்றண் ணிைப்பான் தாள் வாழ்க’ என்றே அவன் தாள்களைக் குறிப் பிட்டு வாழ்த்துகிறார். இதிலும் நான்கு தாள்கள், இத் தோடு விட்டாரா? வள்ளுவர் தாள்களோடு அடியையும் சேர்த்துக் கூறி.பிருக்கிறாரல்லவா! அதனையும் பின்பற்றி மணிவாசகர் அடுத்துக் கூறுகிறார் : "ஈசன் அடிபோற்றி. எந்தை அடிபோற்றி, தேசன் அடிபோற்றி, சிவன் சேவடி