பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


வடலூரில் தைப் பூசத்தன்று முழுதிலாக் காலத்தில் சோதி வழிபாடு நடைபெறுகிறது. அங்கு சத்திய ஞான சபை தெற்கு நோக்கி இருப்பதால் மக்கள் வடக்கு நோக்கி நின்று சோதி வழிபாடு செய்கின்றனர். அப்போது மாலை நேரத்தில் அவர்களுக்கு வலதுபுறம் நிலவு ஒளியும், இடது புறம் ஞாயிறு ஒளியும், எதிர்ப்புறம் சோதி ஒளியும் தோன் றும். அன்று காலை நேரத்தில் ஒளி வணக்கம் செய்கிறவர் களுக்கு, வலதுபுறம் ஞாயிறு ஒளியும், இடதுபுறம் நில வொளியும், எதிர்ப்புறம் சோதி ஒளியும் கிடைக்கும். இது இறைவனை முக்கண்ணனாக வழிபடும் முறையாகவும் அமையும். இக்காட்சி தைப்பூசத்தன்று கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதை வடலூரில் அன்றிப் பிற இடங் களில் காண இயலாது. ஆக இந்த அருட்பெருஞ்சோதி ஒளிவணக்க வழிபாடு கூட பண்டைய பழத்தமிழ் மக்களின் ஒளிவணக்க மரபைச் சேர்ந்ததே யாகும். 7. சுகத்திலுறும் பயன் திருநாவுக்கரசரை சுண்ணாம்புக் காளவாயில் போட்டுப் பூட்டியபின், அவர் சாகாமல் வெளிவந்துபோது அவர் பாடிய பாடல் மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் விங்கிள வேனிலும் மூகவண்டறை பொய் கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே' என்பது. இப்பொருள்களைப் போலவே இறைவனது திரு வடியும் எனக்குக் குளிர்ச்சியாக இருந்தது, அதனால் எனக்கு எவ்வித இடையூறுமில்லை என்பது இதன் பொருள். இதன் உள்ளே மற்றொரு புதை பொருளும் உண்டு. சிந்தித்தால் அதுவும் விளங்கும். அது ஐம்புலன்களுக்கும் குளிர்ச்சியைத் தருகிற ஐந்து பொருள்களை அடக்கி