பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


இதுவும் இந்தப் பாரம்பரிய வழி வந்ததாகவே தெரி கிறது. இது காறும் கூறிய 7 செய்திகளாலும் வள்ளலார் மாறு பட்ட பாதையில் சென்றவரல்ல என்பதும், திருமூலர் காலந்தொட்டு வாழையடி வாழையாக வந்த ஒன்றுபட்ட பாரம்பரியத்தைச் சார்ந்தவர் என்றும், அவரது கொள்கை களும் நெறிகளும் திருமூலர் காலந்தொட்டு சான்றோர் களால் கையாளப்பெற்று வருவன என்பதும், நன்கு புலப் படும். வள்ளலார் பெற்ற பெரும் பேறு வள்ளலார் அருட்பாவின் ஆறாம் திரு முறையில் சன் மார்க்க உலகின் ஒருமைநிலை என்ற தலைப்பில் அதன் இறுதிப்பாடலாக (5624ம் பாடல்) r நோவாது கோன்பெனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான் 鲑0 சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும்-தேவாகின் பேரருளை என்போலப் பெற்றவரும் இவ்வுலகில் யார் உளர் நீ சற்றே அறை என்ற பாடல் காணப்படுகிறது. "நோவாது நோன்பு என்னைப் போல நோற்றவர் யார்? சாகாத வரம் என்னைப் போலப் பெற்றவரி யார்? நின் பேரருளை என்போலப் பெற்றவர் யார்? எந்த உலகிலாவது யாராவது உண்டா? நீயே கூறு?" என்று இறைவனையே கேட்பதாக அமைந் திருக்கிறது இப்பாடல். இது அவரது பெரும்பேறு பெற்ற பெருமிதத்தையே காட்டுகிறது, மற்றொரு பாடல் இன்னும் அதிகமான பேறு பெற்ற தைக் காட்டுகிறது. அது.