பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்தடை வித்திட. - அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற் கென்றே எனை, இந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன், அருளைப் பெற்றேனே என்பது இப்பாடலின் மூலம் வள்ளலார், தான் எதற் காகப் பிறப்பிக்கப் பெற்றேன்? எதற்காக வருவிக்கப் பெற் றேன்? எதற்காக இந்த அருளைப் பெற்றேன்? என்பன வற்றை அவரே கூறுவதாக உள்ளது. இப் ‘பா’ அவரது தெளிவையும் மன உறுதியையும் பெற்ற பெரும்பேற்றை யும் நமக்குத் தெளிவாகக் காட்டுவதாகும். இறுதியாக, அவருடைய கொள்கைகளையும் அவர் வகுத்த நெறி முறைகளையும் அவர் எதிர்பார்த்த அள வுக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என உணர்ந்து, அவர் கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்று கூறி, தைப் பூண் நன்னாளில் சித்தி விளாகத்தில் ஒரு அறைக்குள் சென்று கதவை மூடி அருட்பெருஞ் சோதி ஆண்டவராகிய இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டார். இவ்வாறு அவர் சித்தியடைந்த நாள் 30-1-1874. இது இவ்வுடம் போடு இறைவனை அடையும் சித்தர் பெருமக்களின் முத்திப் பேற்றையே நமக்கு விளக்கிக் காட்டுவதாக இருக் கிறது. அவர் அன்று 'கடைவிரித்தேன் கொள்வார் இவை' என்று கூறியது அவர் எதிர்பார்த்த அளவு இல்லை யென்பதுதாள். என்றாலும் இன்று அவரது கொள்கைகள் தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும், ஆசியாக் கண்டத்திலும்