பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

. அவர், சமரச சன்மார்க்கம் என்னுங் கொள்கையினை வலியுறுத்தினார். இவ்வுலகிலே வாழவேண்டிய நெறியில் வகையுடன் வாழ்ந்தால் மரணமிலாப் பெருவாழ்வு கிட்டும் என உறுதியாக அவர் நம்பினார். உயிரிரக்கம்' என்பதே ஆவர் உயிர்க்கொள்கையாக இருந்தது. 'வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்து மரபில்" ஒருவராய் வந்த அவர், ஒருமையுடன் இறைவன் திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவை வேண்டினார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத உத்தமர்தம் உறவை நாடினார். இவ்வாறு வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் உண்மை தெளிந்து உணர்ந்த ஞானியாக அவர் வீறுடன் விளங்கினார். - இத்தகைய சான்றோரைக் குறித்து 1980-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 9, 10 தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு இப் பொழுது நூல் வடிவில் வெளிவருகிறது. திருச்சி தந்த சிறந்த பெரியோர்களில் ஒருவர் நந் முத்தமிழ்க் காவலர் ஆவர். அரசியல் உலகிலும், சமுதாய உலகிலும், தமிழ் உலகிலும் அவர்கள் ஆற்றிய பணிகள் பல. ; ஆயிரம் ஆயிரம் மேடைகள் ஏறி, அரிய கருத்துக்களைப் பரப்பும் சிறந்த சொற்பொழிவாளராகவும், எளிய தமிழில் இனிய முறையில் பல அரிய நூல்களை எழுதிய ஆசிரியராகவும் விளங்கும் இவர்கள், ஆயிரம் பிறை கண்ட அண்ணலார் ஆர். தமிழ்மொழிக்கும், தமிழினத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் தக்க வகையில் தொண்டாற்றிவரும் இப் பெரியாரை வைணவ மரபில் வாழ்த்தப் பெறுவது போல, இன்னும் ஒரு நூற்றாண்டு இருக்' என வாழ்த்துகிறேன். இச்சிறிய-ஆனால் ரிேய நூலினைத் தமிழ்கூறு நல்லுலகம் ஏற்றுப் போற்றுவதாக, வாழ்க நூலாசிரியர் முத்தமிழ்க் காவலர் வளர்க அவர்தம் தொண்டு! சென்னை-5 够 - 26-11-80 ஐ х x ஜி. ஆர். தாமோதரன்